எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் ரவை
  2. 1துருவிய கேரட்
  3. 1வெங்காயம்
  4. 1சின்ன தக்காளி
  5. சிறிதளவுமல்லித்தழை
  6. 1 பச்சை மிளகாய்
  7. 1/2ஸ்பூன் வரமிளகாய் தூள்
  8. 1/4ஸ்பூன் கரம் மசாலா தூள்
  9. 1/4ஸ்பூன் சீரக தூள்
  10. 1/4ஸ்பூன் பெப்பர் தூள்
  11. தேவையான அளவு உப்பு
  12. 1 1/2கப் சுடு தண்ணீர்
  13. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  14. 2தக்காளி
  15. 1ஸ்பூன் வர மிளகாய் தூள்
  16. 1ஸ்பூன் பெப்பர் தூள்
  17. தேவையான அளவுஉப்பு
  18. சிறிதுமல்லித்தழை
  19. 1/2ஸ்பூன் கடுகு
  20. 1/2ஸ்பூன் சீரகம்
  21. சிறிதுகருவேப்பிலை
  22. 1 பின்ச் பெருங்காய தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் ரவை வெங்காயம் தக்காளி மல்லித்தழை கேரட் வர மிளகாய் கரம் மசாலா சீரக தூள் பெப்பர் தூள் உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக சுடு தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ளவும்.

  2. 2

    அடுப்பில் பணியாரக்கல்லை வைத்து அதில் எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி 3 நிமிடம் வேக விடவும்.திருப்பி போட்டு 2 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.

  3. 3

    மிக்ஸியில் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் பெருங்காய தூள் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அரைத்த விழுதை சேர்த்து மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்துஒரு கொதி வந்ததும் பணியாரம் போல் செய்ததை போட்டு கலந்து கிளறவும். சூப்பரான ரவை ஸ்னாக்ஸ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes