சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda)

#vattaram
சேலம் வட்டாரத்தில் பிரபலமான ரிப்பன் பக்கோடா முறுக்கு வகை..
சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda)
#vattaram
சேலம் வட்டாரத்தில் பிரபலமான ரிப்பன் பக்கோடா முறுக்கு வகை..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 300 கிராம் இட்லி அரிசியை நன்றாக சுத்தம் செய்து நான்கு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து அளவாக நீர் ஊற்றி நைசாக அரைத்து வைக்கவும்.
- 2
பிறகு 25 கிராம் உளுந்து மற்றும் 150 கிராம் பொட்டுக்கடலையை லேசாக வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து சலித்து, அரைத்த இட்லி அரிசி மாவுடன் சேர்க்கவும்.
- 3
அதனுடன் வெள்ளை எள் சேர்க்கவும். 100 கிராம் வெண்ணெயை உருக்கி இந்த மாவுடன் சேர்க்கவும்.
- 4
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து, கையில் ஒட்டாமல் உருட்டுவதற்கு ஏற்றவாறு வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய வைக்கவும்.
- 5
பிசைந்த மாவினை உருட்டி முறுக்கு உரலில் வைத்து காய்ந்த எண்ணெயில் தீயில் வைத்து, சுற்றிலும் அகலமாக பிழிந்து விடவும்.
- 6
முறுக்கு நன்றாக வெந்து, எண்ணெய் கொதிக்கும் சத்தம் அடங்கியதும், நீளமான கம்பி போன்ற கரண்டி கொண்டு மெதுவாக திருப்பி விட்டு வேக விடவும். ஐந்து நிமிடங்கள் வெந்ததும் சுவையான ரிப்பன் பக்கோடா முறுக்கு தயார்.
- 7
குறிப்பு: விருப்பப்பட்டால், அரிசி அரைக்கும் பொழுது வரமிளகாய் சேர்த்து கொண்டால் முறுக்கு சிறிது கார சாரமாக இருக்கும்.
சின்ன குழந்தைகளுக்கு செய்யும்பொழுது காரம் சேர்க்க தேவையில்லை.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
* ரிப்பன் பக்கோடா*(ribbon pakoda recipes in tamil)
#CF2 தீபாவளி ரெசிப்பீஸ்.அரிசி மாவுடன், பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.மேலும் பொட்டுக் கடலை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.தேங்காய் எண்ணெயில் செய்வதால் சுவை அதிகம். Jegadhambal N -
-
ரிப்பன் பக்கோடா (Ribbon pakoda recipe in tamil)
அரிசி மாவு, வெண்ணெய் சேர்த்து செய்யப்பட்டுள்ள, மிகவும் சுவையான இந்த பக்கோடா செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #week3 Renukabala -
-
-
பூண்டு, பட்டர் ரிப்பன் பக்கோடா (Garlic butter ribbon pakoda recipe in tamil)
பூண்டு , பட்டர் சேர்ப்பதால் இந்த ரிப்பன் பக்கோடா மிகவும் சுவையாகவும்,நல்ல பூண்டு மணத்துடன் இருந்தது.#CF2 Renukabala -
ரிப்பன் பக்கோடா🎗️💝✨(Ribbon pakoda recipe in tamil)
#CF2தீபாவளி என்றாலே சாப்பிடுவதற்கு இனிப்பு வகைகள் தான்... ஆனால் இன்றோ பலர் அதிகமாக கார வகைகள் செய்து மகிழ்கின்றனர் அதில் ஒன்றுதான் ரிப்பன் பக்கோடா....❤️ RASHMA SALMAN -
-
-
-
-
பூண்டு ரிப்பன் முறுக்கு (Poondu ribbon murukku recipe in tamil)
#deepfry பூண்டு ரிப்பன் முறுக்கு எளிதில் ஜீரணமாகக் கூடியது. செய்முறை மிகவும் சுலபமானது. Siva Sankari -
சேலம் ஸ்பெஷல் ஹல்வா புட்டு (Selam special halwa puttu recipe in tamil)
#arusuvai1 இது சேலத்தில் பிரபலமான ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
கேழ்வரகு ரிப்பன் பக்கோடா (Ragi ribbon pakoda) (Kelvaragu ribbon pakoda recipe in tamil)
கேழ்வரகை வைத்து நிறைய உணவு தயாரித்திருக்கிறோம். நான் இந்த ஸ்னாக் முயற்சித்தேன். மிகவும் சுவையாகவும் கிரிஸ்பியாகவும் இருந்தது.#Millet Renukabala -
செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)
#wt3 chettinadu..பாரம்பர்ய சுவையில் செய்த செட்டிநாடு கை சுத்து முறுக்கு... செய்முறை.. Nalini Shankar -
பொட்டுக்கடலை பக்கோடா (Potukadalai Pakoda recipe in tamil)
#Kk குழந்தைகள் சிறப்பான உடல் வளர்ச்சியினை பெறவும், அவர்களின் உடல் தசைகளின் வலுவிற்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும்.ஆரோக்கியமாக பொட்டுக்கடலை பக்கோடா இதை டிரை பன்ணுங்க. Anus Cooking -
-
ரிப்பன் பக்கோடா
#GA4week3#pakoda பூண்டு சோம்பு சேர்ப்பதால் நல்ல மணமாக இருக்கும் மிகவும் ருசியான மொறு மொறு ரிப்பன் பக்கோடா எளிதில் செய்யலாம்.... Raji Alan -
உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)
#cf2 10 நிமிடங்களில் இந்த முறுக்கு செய்துவிடலாம்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
ரிப்பன் பக்கோடா
ரிப்பன் பக்கோடா-எளிமையாக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ்.தீபாவளி/விநாயகர் சதுர்த்தி/போன்ற பண்டிகை காலங்களில்-கடலை மாவு,அரிசி மாவு சேர்த்து கிரிஸ்பியாக செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
மினி பட்டர் கை முறுக்கு(mini butter murukku recipe in tamil)
#DEதீபாவளிக்காக நான் செய்த மினி பட்டர் புழுங்கல் அரிசி கை சுத்து முறுக்கு.. Nalini Shankar -
சேலம் ஸ்பெஷல் எசேன்ஸ் தோசை
#vattaramதோசை மேல் பரப்ப வாசனையான மசாலா முதல் முறை செய்தேன், ருசித்தேன். நல்ல சுவை #சேலம் #vattaram Lakshmi Sridharan Ph D -
பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)
#Deepavali # kids2இது என் அம்மாவின் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். என்னம்மா கோதுமை அல்வா மிக அருமையாக செய்வார்கள்.அதேபோல் சீப்பு பணியாரம் பாசி பருப்பு முறுக்கு பயத்தம் உருண்டை பூண்டு முறுக்கு ஓட்டு பக்கோடா போன்றவை தீபாவளிக்கு மிக அருமையாக செய்வார்கள். நான் இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். இது என்னுடைய குக் பாடிர்க்கான முயற்சி. Meena Ramesh -
-
-
-
செரா தூள் –ரிப்பன் பகோடா (Ribbon pakoda recipe in tamil)
அம்மா செரா தூள் (wood shavings) என்றுதான் சொல்வார்கள். இந்த பழைய கால ரெசிபியில் அரிசி, கடலை மாவுடன் கூட நலம் தரும் ஸ்பைஸ்கள் சுக்கு, கருப்பு சீரகம், எள்ளு சேர்த்தேன். #deepfry Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்