ரவா இட்லி பர்கர்

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
Chennai , India

#cookwithsugu
இந்த லாக்டோன் இல் சுலபமாக காலையில் மீந்த இட்லி மற்றும் மதியம் மீந்த பொரியலை வைத்து ஒரு எளிமையான மற்றும் ருசியான ஈவினிங் ஸ்நாக்ஸ் டைம் பர்கர் எப்படி செய்வது என்று பகிர்ந்துள்ளேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. ரவா இட்லி செய்வதற்கு
  2. 1/2 கப் ரவை
  3. 1/4 கப் தயிர்
  4. 1/4 கப் தண்ணீர்
  5. தேவையான அளவுஉப்பு
  6. 1 டேபிள் ஸ்பூன் பொடிதாக நறுக்கிய வெங்காயம்
  7. 1/2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  8. 1/2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
  9. உருளைக்கிழங்கு பட்டாணி பட்டீஸ்
  10. 1 கப் உருளைக்கிழங்கு பட்டாணி பொரியல்
  11. 3 டேபிள்ஸ்பூன் பிரட் கிரம்ஸ்
  12. 1 டேபிள் ஸ்பூன் ரவை
  13. 1 டேபிள்ஸ்பூன் மைதா மாவு
  14. 1 டேபிள் ஸ்பூன் கார்ன்ஃப்ளார்
  15. 1/2வெங்காயம் பொடியாக நறுக்கியது
  16. 1/4 பச்சை மிளகாய்
  17. தேவையான அளவுஉப்பு
  18. பொரிப்பதற்கு எண்ணெய்
  19. பர்கர் அடுக்கு வதற்கு தேவையானவை
  20. 2 டேபிள் ஸ்பூன் மயோனைஸ்
  21. 1 டேபிள்ஸ்பூன் கெச்சப்
  22. சிறிதளவுலெட்யூஸ்
  23. 1 வட்டமாக வெட்டிய வெங்காயம்
  24. சிறிதளவுநறுக்கிய குடைமிளகாய்
  25. 1 சீஸ் சிட்
  26. 1/4 டேபிள் ஸ்பூன் எள்ளு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் ரவா இட்லி எப்படி செய்வது என்று பார்ப்போம். 1/2 கப் ரவை 1/4 கப் தயிர் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    1/4 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கலந்த கலவையை 20 நிமிடம் அப்படியே வைத்து விடவும்.

  3. 3

    20 நிமிடம் கழித்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து. கொள்ளவும்

  4. 4

    இப்பொழுது அதை இட்லி தட்டில் ஊற்றி 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால் நம்முடைய ரவா இட்லி தயார். செய்து வைத்த இட்லியை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  5. 5

    வாணலியில் 1/2 டேபிள்ஸ்பூன் வெண்ணை சேர்த்து வெட்டி வைத்த இட்லியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  6. 6

    உருளைக்கிழங்கு பட்டாணி பொரியல் ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்

  7. 7

    அதே பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் பிரட் கிரம்ஸ் 1 டேபிள்ஸ்பூன் மைதா மாவு மற்றும் 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் சேர்த்துக் கொள்ளவும்

  8. 8

    அடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் ரவை, 1/2 வெங்காயம் பொடியாக நறுக்கியது, 1/4 நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.

  9. 9

    இப்பொழுது தேவைக்கேற்ப மிளகு தூள் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்

  10. 10

    பிசைந்த உருளைக்கிழங்கு பொரியலில் இருந்து சிறிதளவு எடுத்து கையில் தட்டி வடை போல் செய்து வைத்துக் கொள்ளவும். நம்முடைய பட்டீஸ் ரெடி

  11. 11

    ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து செய்து வைத்திருக்கும் பட்டீஸ் நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  12. 12

    பர்கரை அடுக்குவதற்கு முதலில் நம் இட்லி துண்டில் ஒரு பக்கம் மயோனைஸ் 1 டேபிள் ஸ்பூன் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் கெட்சப் சேர்த்து கொள்ளவும்.

  13. 13

    இதன்மேல் லெட்டூஸ் மற்றும் நாம் செய்திருக்கும் உருளைக்கிழங்கு பட்டீஸ் வைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் மயோனைஸ் கொஞ்சம் மற்றும் கெட்சப் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்

  14. 14

    இதன் மேல் ஒரு சீஸ் சீட் சேர்த்துக் கொள்ளவும். (சீ சீட் இல்லை என்றால் துருவிய சீஸ் கூட பயன்படுத்தலாம்). அதன் பின்னர் மற்றொரு இட்லியில் மயோனைஸ் மற்றும் கெட்சப் தடவி அதன் மேல் சேர்த்து வைக்கவும்.

  15. 15

    மேலே சிறிது எள் சேர்த்துக் கொள்ளவும். நம்முடைய சுவையான இட்லி பர்கர் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sakarasaathamum_vadakarium
அன்று
Chennai , India

Similar Recipes