உளுந்து வடை

Suku
Suku @sukucooks

உளுந்து வடை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பேர்
  1. 1/2 கப்உளுந்து
  2. 1 சிறியதுவெங்காயம்
  3. 1 தேக்கரண்டிமிளகு
  4. 1 தேக்கரண்டிசீரகம்
  5. சிறிதளவுநறுக்கிய கருவேப்பிலை
  6. 1 மேஜை கரண்டிஅரிசி மாவு
  7. 1/4 தேக்கரண்டிபெருங்காயத்தூள்
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவுஎண்ணெய் பொறிக்க

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    உளுந்தை கழுவி தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற விடவும். ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைத்தால் வடை நன்றாக வரும்

  2. 2

    வெங்காயத்தையும் கருவேப்பில்லையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்

  3. 3

    மிக்ஸியில் உளுந்தை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து (குளிர் நீர்) மையாக அரைக்கவும்

  4. 4

    தண்ணீர் உள்ள பாத்திரத்தில் கொஞ்சம் மாவு போட்டால் கரையாமல் மிதக்க வேண்டும்

  5. 5

    எண்ணெய் சூடு செய்யவும்

  6. 6

    அதன் பிறகு மாவில் அரிசி மாவு வெங்காயம் கருவேப்பிலை சீரகம் மிளகு பெருங்காயத்தூள் சேர்த்து அடித்து பிசையவும். இது வடை மென்மையாக வர உதவும்

  7. 7

    பொறிக்கும் முன் கடைசியாக உப்பு சேர்த்து நன்கு பிசையவும். முன்பே உப்பு சேர்த்தால் மாவில் தண்ணீர் விடும்

  8. 8

    மிதமான சூட்டில் எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suku
Suku @sukucooks
அன்று

Similar Recipes