தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
நான்கு பேர்
  1. 100 கிராம் வால்நட்
  2. ஒரு கப் துருவிய தேங்காய்
  3. முக்கால் கப் நாட்டுச் சர்க்கரை
  4. கால் கப் காய்ச்சி ஆறிய பால்
  5. ஒரு டேபிள்ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    வால்நட்டை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு வாணலியை சூடாக்கி ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு இரண்டு ஸ்பூன் தேங்காயை எடுத்து வைத்துவிட்டு மீதி உள்ள தேங்காயை சேர்த்து மிதமான தீயில் நீர் வற்றும் வரை வதக்கவும். பின்பு அரைத்து வைத்துள்ள வால்நட்டை சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதக்கவும். நாட்டுச் சர்க்கரையை சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.

  3. 3

    பிறகு பாலை ஊற்றி இரண்டு நிமிடம் அல்லது மூன்று நிமிடம் கிளறி, லட்டு பிடிக்கும் பதம் வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். பிறகு மிதமான சூட்டில் லட்டுகளாக உருட்டிக் கொள்ளவும். இவற்றை தேங்காய் துருவலில் புரட்டி எடுக்கவும். சுவையான வால்நட் தேங்காய் லட்டு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes