பெரிய நெல்லிக்காய் துவையல்

Sowmya
Sowmya @vishalakshi

#cookerylifestyle
பெரிய நெல்லிக்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன வைட்டமின் C, வைட்டமின் E வைட்டமின் A , இரும்பு, கால்சியம் என பலவிதமான வைட்டமின்களும் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது ... தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதனால் நம்முடைய ஞாபக சக்தியும் அதிகரிக்கும்... கண்பார்வை தெளிவாக தெரியும்... எதிர்ப்பு சக்தியும் மிகவும் அதிகரிக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்யமான வாழ்விற்கு தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் எடுத்துக் கொண்டால் சிறந்தது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  2. 2பெரிய நெல்லிக்காய்
  3. 3 டேபிள் ஸ்பூன் வெள்ளை உளுந்து
  4. 3 வர மிளகாய்
  5. 10தோல் உரித்த சின்ன வெங்காயம்
  6. 1சிறு துண்டு இஞ்சி
  7. ஒரு கையளவு கருவேப்பிலை
  8. 1/4 மூடி கீரிய அல்லது துருவிய தேங்காய்
  9. தேவையானஅளவு உப்பு
  10. தேவையானஅளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானவுடன் அதில் 3 டேபிள் ஸ்பூன் உளுந்து சேர்த்து பொரிய விட வேண்டும்

  2. 2

    பிறகு 3 வரமிளகாய் மற்றும் தோல் உரித்த ஒரு துண்டு இஞ்சியை சேர்த்து அதனுடன் தோல் உரிந்த 10 சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும்

  3. 3

    பிறகு ஒரு கையளவு கருவேப்பிலை சேர்த்து எல்லாம் நன்றாக வதங்கும் வரை வதக்க வேண்டும்

  4. 4

    இப்பொழுது இரண்டு பெரிய நெல்லிக்காய்களை துண்டுகளாக வெட்டி அதனையும் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்க வேண்டும் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளலாம்

  5. 5

    நெல்லிக்காயும் நன்றாக வதங்கியவுடன் நாம் அதில் கால் மூடி அளவிற்கு தேங்காயைத் துருவியோ அல்லது கீரியோ சேர்த்துக்கொண்டு ஒரு 2 நிமிடம் நன்றாக வதக்கலாம் பிறகு அடுப்பை அணைத்து விடலாம்

  6. 6

    வதக்கிய கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்

  7. 7

    இதோ மிகவும் ருசியான ஆரோக்கியமான பெரிய நெல்லிக்காய் துவையல் தயார் வாங்க சாப்பிடலாம் ஆரோக்கியமாக இருக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya
Sowmya @vishalakshi
அன்று

Similar Recipes