வெற்றிலை ரசம்

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

வெற்றிலை ரசம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
நான்கு பேருக்கு
  1. 3 வெற்றிலை
  2. 6பல் பூண்டு
  3. ஒரு ஸ்பூன் சீரகம்
  4. அரை ஸ்பூன் மிளகு
  5. 2வர மிளகாய்
  6. 2கொத்து கருவேப்பிலை
  7. சிறிதளவுகொத்தமல்லி இலைகள்
  8. ஒரு ஸ்பூன் நெய்
  9. 2 தக்காளி
  10. கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. சிறிதளவுபெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தளதளவென்று வெற்றிலையை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    நன்கு பழுத்த தக்காளி எடுத்து கழுவி வைத்துக் கொள்ளவும்

  3. 3

    மிக்ஸி ஜாரில் மிளகு சீரகம் பூண்டு சிறிது கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்து அதனுடன் வெற்றிலை சேர்த்து அரைக்கவும்

  4. 4

    பிறகு இதனுடன் 2 தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  5. 5

    ஒரு கடாயில் நெய் சேர்த்து நெய் சூடானதும் சிறிது கடுகு சிறிது பெருங்காயத்தூள் கருவேப்பிலை வரமிளகாயை கிள்ளி போட்டு தாளிக்கவும்.

  6. 6

    பிறகு அரைத்து வைத்த ரசம் கலவையை சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி மல்லி இலைகளை தூவினால் அருமையான உடம்பிற்கு ஆரோக்கியம் தரும் வெற்றிலை ரசம் தயார்😋😋😋 இந்த வெற்றிலை ரசம் வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் சீரண தொந்தரவு சளித் தொந்தரவு ஆகியவை நீங்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes