முளைபச்சை பயறு மிளகு அடை தோசை

#cookerylifestyle...
முளைகட்டின தானியங்கள் நிறைய சத்துக்கள் நிறைந்தது.. அத்துடன் மிளகு சேர்த்து செய்திருப்பதினால் உடல் நலனுக்கேத்த ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய ஒரு உணவாக்கிறது...
முளைபச்சை பயறு மிளகு அடை தோசை
#cookerylifestyle...
முளைகட்டின தானியங்கள் நிறைய சத்துக்கள் நிறைந்தது.. அத்துடன் மிளகு சேர்த்து செய்திருப்பதினால் உடல் நலனுக்கேத்த ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய ஒரு உணவாக்கிறது...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸியில் ஊற வைத்த அரிசி, பயிறு, இஞ்சி, பூண்டு, சீரகம்கொத்தமல்லி தண்டு உப்பு சேர்த்து கொஞ்சம் கர கரப்பாக அரைத்து எடுத்து அத்துடன் மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்துக்கவும்
- 2
ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து அத்துடன் பொடியாக நறுக்கின வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வதக்கின வெங்காய கலவையை அரைத்து வைத்திருக்கும். பச்சை பயிர் மாவுடன் நன்கு கலந்துக்கவும்
- 4
தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் மாவை ஒரு கரண்டியால் எடுத்து தோசை சுட்டு இரண்டு பக்கவும் திருப்பி விட்டு சுற்றி தேங்காய் எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும்.. மிக ஆரோக்கியமான சுவையான முளைகட்டின பச்சை பயிர் மிளகு அடை தயார்... இதில் முளைகட்டின பயிருடன், மிளகு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்திருக்கிற தினால் சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான ஒரு சிறந்த உணவு...குறிப்பு - அடையின் மேல் கொஞ்சம் மிளகு தூவியும் தோசை சுடலாம்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வால்நட் மிளகு ஸ்டாப்ட் பராத்தா
#walnuttwists -.... வால்நட்டில் உடல் ஆரோகியத்துக்கேத்த நிறைய சத்துக்கள் இருக்கின்றன...இந்த காலகட்டத்தில் மிளகும் சாப்பாட்டில் சேர்த்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..ஆகையால் வால்நட், மிளகு சேர்த்து பராத்தா செய்துள்ளேன்.. Nalini Shankar -
குதிரைவாலி மிளகு அடை (Barnyard millet adai dosai)
#combo#week4.. அடை தோசை..இட்லி அரிசி அல்லது பச்ச அரிசியில் அடை செய்வோம்..ஆரோக்கியம் மிக்க குதிரைவாலி அரிசியில் மிளகு சேர்த்து செய்துள்ளேன்... Nalini Shankar -
மிளகு அரிசி அடை
கார சாராமான சுவையான சத்தான நோய் தடுக்கும் மிளகு அரிசி அடை#pepper Lakshmi Sridharan Ph D -
ஆந்திரா பெசரெட் / பச்சை பயிறு தோசை(pachai payiru dosai Recipe in tamil)
பச்சை பயிரில் ப்ரோட்டின், ஃப்பைபர் சத்துக்கள் உள்ளது. இது உடல் சூட்டை தணிக்கிறது. இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு குறையும். இரும்பு சத்து வளமாக உள்ளது. உடல் எடையை குறைக்கவும், சீராக பராமரிக்கவும் உதவுகிறது. இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். #chefdeena Manjula Sivakumar -
பச்சைபயிர் மிளகு ரசம்🥗
#refresh1 புத்துணர்ச்சி ஊட்டும் அருமையான பச்சை பயிர் மிளகு ரசம் செய்ய முதலில் தேவையான அளவு பச்சை பயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அடுப்பில் 15 நிமிடம் வேகவைத்து அதனுடன் 1 தக்காளி சேர்த்து வெந்தவுடன் பச்சைப் பயிர் தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து , அதனுடன் ஒரு பச்சைத் தக்காளி கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் பின் மிளகு, சீரகம், கொத்தமல்லி, பூண்டு, கறிவேப்பிலை, வரமிளகாய், அனைத்தையும் கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதை மிக்ஸியில் ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, சிறிய பெருங்காயம் கட்டி, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் கரைத்து எடுத்து வைத்துள்ள புளி தக்காளி கலவையை கடாயில் ஊற்றவும். பின் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி ,மிளகு கலவைகளை அதனுடன் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கவும்.👍👍 சூப்பரான பச்சைப் பயிறு மிளகு ரசம் தயார்👌👌👌👌 Bhanu Vasu -
சுட சுட சுவையான மிளகு வடை.
#pepper..... மிளகு உடம்புக்கு எவ்ளவு நல்லது என்று எல்லோருக்கும் தெரிந்ததே .. இந்த காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வருவதற்கு தினவும் உணவில் சேர்த்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..... Nalini Shankar -
வாழ பிண்டி தோரன் (Vaazhai pindi thoran recipe in tamil)
#kerala... நம்ம ஊர் வாழைதண்டைத்தான் மலையாளத்தில் வாழை பிண்டி என்கிறார்கள்.... அதைவைத்து செய்யக்கூடிய தோரன்.. பொரியல் Nalini Shankar -
தக்காளி அடை. தோசை(tomato adai dosai recipe in tamil)
#ed1மழைக்கால பருவ நிலைக்கு சூப்பரான சுவையான சக்தி தரக்கூடிய அடை தோசை இது. Meena Ramesh -
இஞ்சி மிளகு ரசம்(inji milagu rasam recipe in tamil)
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இந்த ரசம் செய்து அசத்த உங்கள். #made1 cooking queen -
மிளகு தட்டை (Milagu thattai recipe in tamil)
#kids1மிளகு மருத்துவ குணங்கள் நிறைந்தது.. உணவு செரிமானம் செய்ய வாயு ஏற்படாமல் தடுக்க பயன்படுகின்றன. மிளகாய்த்தூளுக்கு மாறாக மிளகு சேர்த்து செய்த சுவையான ஆரோக்கியமான மிளகு தட்டை. Hemakathir@Iniyaa's Kitchen -
-
முளைக் கட்டிய பச்சை பயறு கிரேவி
#cookerylifestyleமுளைக் கட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதுடன், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன. அவை பார்வைத்திறனை மேம் படுத்துவதுடன் சருமத்துக்கும் புத்துணர்வு அளிக்கின்றன. Sai's அறிவோம் வாருங்கள் -
பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)
#kp - poriyalWeek -4வித்தியாசமான சுவையில் பீன்ஸ், காரட், பாசிப்பருப்பு, மற்றும் தேங்காய் சேர்த்து செய்த மிக அருமையான பொரியல்...செய்முறை Nalini Shankar -
-
பாலாகாய் ரோஸ்ட்.. (வாழைக்காய் மிளகு ரோஸ்ட்) (Balakai roast recipe in tamil)
#karnataka... இது ஒரு கன்னட நாட்டு வாழைக்காய் வறுவல்... Nalini Shankar -
மில்கி மிக்ஸ்ட் வெஜிடபிள் குர்மா(veg kurma recipe in tamil)
#welcome 2022உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பால் முந்திரி மற்றும் நிறைய காய்கள் சேர்த்து செய்த மில்கி மிக்ஸ்ட் வெஜிடபிள் குர்மா... Nalini Shankar -
#immunity மிளகு பூண்டு ரசம்
இம்முநிடி மேல் படுத்த மிக முக்கிய காரணமாக இருக்கும் மிளகு அதிகமாக நாம் பயன்படுத்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம் Cookingf4 u subarna -
லேஹியம் இஞ்சி புளி(inji puli lehiyam recipe in tamil)
#ed3கேரளாவில் இது மிகவும் பாப்புலர், நலம் தரும் பண்டம். நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. ஜீரணம் அதிகரிக்கும் சக்தி, இருமல் , காய்ச்சல், சளி தடுக்கும். புற்று நோய் தடுக்கும். இஞ்சி புளி பல உணவுகளோடு சேர்த்துசாப்பிடலாம். சத்து, சுவை, மணம் நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
அசத்தலான முருங்கைக்கீரை அடை தோசை
#colours2 - green... 3 விதமான பருப்பு மற்றும்.அரிசி சேர்த்து செய்யும் அடை தோசையுடன் முருங்கை கீரை கலந்து செய்யும்போது இரும்பு, புரதம் நிறைந்த ஹெல்த்தியான தோசை,.. Nalini Shankar -
மிளகு அவல்
#colour3-white...மிளகு சீரகம் முந்திரி நெய்யில் வறுத்து சேர்த்து செய்த ஆரோக்கியமான சுவையான மிளகு அவல் செய்முறை... Nalini Shankar -
பெசரட் தோசை (பச்சை பயறு தோசை) (Pesarettu dosai recipe in tamil)
#ap... பச்சைப்பயிறு தோசை ஆந்திர மாநில மக்களின் ஒரு வகையான உணவு... ஆரோக்கியமானதும் கூட.. பச்சைப்பயரில் உடம்புக்கு தேவையான புரதம் நிறைய இருக்கிறது... இதை எல்லோரும் சாப்பிடலாம்... Nalini Shankar -
குதிரைவாலி தேங்காய் சாதம்
#3m#millet.. Banyard millet.குதிரைவாலி #vattaram9# தேங்காய் -உடல் ஆரோகியத்துக்கு தேவையான மிக சத்துக்கள் நிறைந்த குதிரைவாலி அரிசி வைத்து தேங்காய் சாதம் செய்துள்ளேன்... மிக அருமையாக இருந்தது... Nalini Shankar -
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இஞ்சி ரசம். (Inji rasam recipe in tamil)
#GA4#week 12#Rasam. இப்போதுள்ள காலகட்டத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூட்ட வேண்டிய அவசியம் நமுக்கு இருக்கிறது... அதற்க்கு ஏத்தாது இந்த இஞ்சி ரசம்.. Nalini Shankar -
பச்சை மிளகு புளிக்குழம்பு (Raw peppercorn tamarind gravy recipe in tamil)
#tkபச்சை மிளகு கிடைக்கும் போது இந்த மிளகு புளிக்குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்,சத்துக்கள் நிறைந்தது. Renukabala -
மொறு மொறு பச்சை மாங்காய் அடை தோசை 😋(raw mango adai dosai recipe in tamil)
#birthday3 Dosaiதோசைகளில் மிக பிரபலமான அடை தோசை எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு.. பச்சை மாங்காயுடன் சில வித்தியாச சேருவகைகள் சேர்த்து எங்கள் வீட்டில் செய்யும் காரசாரமான மிக சுவையான மொறு மொறுப்பான அடை தோசையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.. Nalini Shankar -
பால் வெங்காயத்தாள் பருப்பு கூட்டு (Spring onion milk moongdal curry recipe in tamil)
வெங்காயத்தாள் சத்துக்கள் நிறைந்தது. அத்துடன் பாசிப்பருப்பு, பால் சேர்த்து செய்த இந்த கூட்டு மிகவும் சுவையாக இருந்தது.#cookwithmilk Renukabala -
அடை மாவு பணியாரம்
#vattaram7..பணியாரம்.... அடை தோசை மாவு வைத்து செய்த கார பணியாரம்... சுவையோ சுவை.... Nalini Shankar -
பீட்ரூட் வெள்ளை காராமணி பொரியல். (Beetroot vellai kaaramani poriyal recipe in tamil)
#GA4# week 5.... பீட்ரூடடில் இரும்பு மற்றும் நார் சத்து அதிகமாக இருக்கிறது, அது உடல் சோர்வு வராமல் தடுக்க உதவுகிறது.. அத்துடன் காராமணி சேர்வதினால் ஆரோக்கியமாகிறது.. Nalini Shankar -
பாலக் பெப்பர் பக்கோடா(palak pepper pakoda recipe in tamil)
#wt3 Palakபாலக் கீரை வைத்து நிறைய விதமான சமையல் செய்வோம்... பாலக் இலைகளை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. மிகவும் ருசியாக இருந்துது... Nalini Shankar -
குடமிளகாய் சாம்பார்
நோய் எதிர்ப்பு சக்தி மற்று கால்சியம் சத்து நிறைந்தது#goldenapron3#immunity Sarulatha
More Recipes
கமெண்ட்