முளைபச்சை பயறு மிளகு அடை தோசை

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#cookerylifestyle...
முளைகட்டின தானியங்கள் நிறைய சத்துக்கள் நிறைந்தது.. அத்துடன் மிளகு சேர்த்து செய்திருப்பதினால் உடல் நலனுக்கேத்த ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய ஒரு உணவாக்கிறது...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2கப் முளைகட்டின பச்சை பயிர்
  2. 1கப் ஊற வைத்த பச்சரிசி
  3. ஒரு துண்டு இஞ்சி
  4. 4பல் பூண்டு
  5. 1ஸ்பூன் சீரகம்
  6. 1-2 ஸ்பூன் ஒன்னிரண்டாக பொடித்த மிளகு
  7. 1கைப்பிடி பச்சை கொத்தமல்லி தண்டு
  8. தாளிக்க
  9. 2ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  10. 1பொடியாக நறுக்கின வெங்காயம்
  11. 1ஸ்பூன் கடுகு
  12. 1/2 ஸ்பூன் சீரகம்
  13. 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  14. 1/2 ஸ்பூன் பெருங்காயம்
  15. தேவையான அளவுஅடை சுட தேங்காய் எண்ணெய், உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு மிக்ஸியில் ஊற வைத்த அரிசி, பயிறு, இஞ்சி, பூண்டு, சீரகம்கொத்தமல்லி தண்டு உப்பு சேர்த்து கொஞ்சம் கர கரப்பாக அரைத்து எடுத்து அத்துடன் மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்துக்கவும்

  2. 2

    ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து அத்துடன் பொடியாக நறுக்கின வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வதக்கின வெங்காய கலவையை அரைத்து வைத்திருக்கும். பச்சை பயிர் மாவுடன் நன்கு கலந்துக்கவும்

  4. 4

    தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் மாவை ஒரு கரண்டியால் எடுத்து தோசை சுட்டு இரண்டு பக்கவும் திருப்பி விட்டு சுற்றி தேங்காய் எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும்.. மிக ஆரோக்கியமான சுவையான முளைகட்டின பச்சை பயிர் மிளகு அடை தயார்... இதில் முளைகட்டின பயிருடன், மிளகு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்திருக்கிற தினால் சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான ஒரு சிறந்த உணவு...குறிப்பு - அடையின் மேல் கொஞ்சம் மிளகு தூவியும் தோசை சுடலாம்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes