ரவா பணியாரம்

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

ரவா பணியாரம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு பேர்
  1. ஒரு கப் ரவா
  2. ஒரு கப் புளித்த தயிர்
  3. 1/2 ஸ்பூன்கல்லு உப்பு
  4. 2வெங்காயம் பொடியாக நறுக்கியது
  5. 2பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  6. ஒரு துண்டு இஞ்சி
  7. சிறிதுகருவேப்பிலை
  8. சிறிதுகொத்தமல்லி
  9. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் இவைகளை பொடியாக நறுக்கி இஞ்சியைத் துருவி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதில் ரவை உப்பு கலந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

  3. 3

    இப்பொழுது அதில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சித் துருவல் கருவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கியது எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

  4. 4

    பணியார கடாயில் கால் டீஸ்பூன் ஒவ்வொரு குழியிலும் ஊற்றி சூடு செய்து கொள்ளவும்.

  5. 5

    இப்பொழுது அந்த கலந்த மாவிலிருந்து சிறிய கரண்டி கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக விட்டு ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்.

  6. 6

    இப்பொழுது அதை திருப்பி போட்டு ஒரு 2 நிமிடம் விடவும். அருமையான ரவா பணியாரம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes