கோவில் புளியோதரை

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

கோவில் புளியோதரை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
இரண்டு பேர்
  1. 2 பெரிய எலுமிச்சை பழ அளவு புளி
  2. அரை டீஸ்பூன் மஞ்சள் பொடி
  3. ஒரு கப் சாதம் உதிரியாக வடித்து ஆற வைத்தது
  4. தேவையான அளவுஉப்பு
  5. பொடி அரைக்க
  6. ஒரு டீஸ்பூன் வெந்தயம்
  7. ஒரு டீஸ்பூன் எள்
  8. தாளிக்க
  9. ஒரு டீஸ்பூன் கடுகு
  10. ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு
  11. ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  12. 3வரமிளகாய்
  13. 2 ஆர்க்கு கருவேப்பிலை
  14. 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  15. மூன்று சிட்டிகை பெருங்காயம் பொடி

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    புளியை 15 நிமிடம் ஊற விட்டு இரண்டு டம்ளர் நீர்விட்டு கரைத்து வடித்து கொள்ளவும். இதனுடன் தேவையான உப்பு மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி, கொதிக்க விடவும். நன்கு கொதித்து புளி, விழுது போல் ஆனவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.

  2. 2

    வெந்தயம் மற்றும் எள்ளை லேசாக வெறும் வாணலியில் வறுத்து எடுத்து ஆறவிட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    வாணலியை சூடாக்கி நல்லெண்ணெயை ஊற்றி சூடானவுடன், தாளிக்க கொடுத்துள்ளவற்றை சேர்த்து வறுத்து எடுத்து ஆறின சாதத்தில் கொட்டவும்.

  4. 4

    பிறகு புளிவிழுதையும் சாதத்துடன் சேர்த்து நன்கு கிளறவும். அடுத்து அரைத்து வைத்துள்ள புளியோதரைப் பொடியையும் சேர்த்து நன்கு கிளறவும். சுவையான கோவில்களில் செய்யப்படும் புளியோதரை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes