கழனி ரசம்

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#refresh1
#செஃப் தீனா

கழனி ரசம்

#refresh1
#செஃப் தீனா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பேர்
  1. தேவைக்குஅரிசி கழுவிய தண்ணீர்
  2. தேவைக்குபுளிக்கரைசல்
  3. 2மீடியம் சைஸ் தக்காளி
  4. அரைக்க:
  5. (1டீஸ்பூன் மிளகு
  6. 1டீஸ்பூன் சீரகம்
  7. சிறிதுகறிவேப்பிலை
  8. 1 முழு பூண்டு
  9. 1வர மிளகாய்)
  10. தாளிக்க:
  11. கடுகு
  12. கறிவேப்பிலை
  13. வர மிளகாய்
  14. 1/2ஸ்பூன் பெருங்காயத்தூள்
  15. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  16. 2டீஸ்பூன் கடலை எண்ணெய்
  17. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    அரிசி யை 2 முறை கழுவி அதன் பிறகு 30 நிமிடங்கள் ஊற வைத்து, வடிகட்டிய தண்ணீர் தான் கழனி. தண்ணீர் இன்னும் வேண்டும் எனில் மீண்டும் கழுவி அந்த தண்ணீரையும் எடுத்து கொள்ளலாம்.

  2. 2

    அரைக்க வேண்டியதை அரைத்துக் கொள்ளவும். தக்காளியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் அல்லது அரைக்க வேண்டிய பொருட்களுடன் சேர்த்து அரைக்கவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை,வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.பின் பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்க்கவும்.

  4. 4

    தக்காளி சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கவும். பின் அரைத்த கலவையை சேர்த்து வதக்கவும். பின் தேவையான அளவு புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்

  5. 5

    கடைசியாக,கழனி மற்றும் தக்காளி வேக வைத்த தண்ணீர் சேர்த்து உப்பு பார்த்து கொதிக்க விடாமல் நுரைத்து வரும் போது மல்லி இலை தூவி இறக்கவும்.

  6. 6

    சுவையான கழனி ரசம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes