எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  1. 2 கப் வேக வைத்த பச்சரிசி சாதம்
  2. 1 டீஸ்பூன் நல்லெண்ணெய்
  3. 1பெரிய எலுமிச்சை பழம்
  4. 1 டீஸ்பூன் வேர்க்கடலை
  5. 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  6. 1 டீஸ்பூன் கடுகு
  7. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  8. 2 பச்சை மிளகாய்
  9. 4 முந்திரி
  10. கறிவேப்பிலை
  11. சிறிதுபெருங்காயத்தூள்
  12. சிறிதுமஞ்சள் தூள்
  13. உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    சாதத்தில் உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும் பிறகு வேகவைத்த சாதம் நன்கு ஆறிய பிறகு இதில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பத்து நிமிடம் வைக்கவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரி சேர்த்து தாளிக்கவும் பிறகு இதில் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளிக்கவும் மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கலக்கவும்

  3. 3

    பிறகு இதில் பெருங்காயத்தூள் சேர்த்து உடனடியாக அடுப்பை அணைக்கவும், இந்த கலவையை எலுமிச்சம் பழம் கலந்த சாதத்தில் சேர்த்து நன்றாக கிளறவும்...

  4. 4

    அட்டகாசமான எலுமிச்சை சாதம் தயார்... குறிப்பு 😍 சாதத்தில் எலுமிச்சை சாறும், எண்ணையும் முன்பே கலப்பதால் சாதத்தில் புளிப்பு சுவை நன்றாக ஏறும்... எலுமிச்சை சாதம் தயாரித்த உடனே பரிமாறக்கூடாது, சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே தயாரித்து வைத்துக் கொள்ளவும் அப்போதுதான் அதன் சுவையும் மணமும் நன்றாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

கமெண்ட் (15)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
எலுமிச்சை ஜெஸ்ட் சேர்த்தேன். நல்ல வாசனை . வேர்க்கடலை சேர்க்கவில்லை . நலல ருசி

Similar Recipes