ஆம்பூர் ஸ்பெஷல் வெஜ் தம் பிரியாணி

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#vattaram
கார சாரமான வாசனை தூக்கும் ஆம்பூர் ஸ்பெஷல் வெஜ் பிரியாணி, ஆம்பூர் ஸ்பெஷல் ஆனாலும் mogul cuisine ஆதாரம். பல ஸ்பைஸ், பல நிற காய்கறிகள், பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. #vattaram

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

80 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1மேஜைகரண்டி நல்லெண்ணை
  2. 3கப் பச்சை பட்டாணி + கேரட் ஃரோஜென் அல்லது ஃபிரெஷ்
  3. 1கப் மஞ்சள் ஸ்குவாஷ் தூண்டுகள்
  4. ½ கப் நெய் அல்லது நல்லெண்ணை
  5. தாளிக்க:
  6. 10 கிராம்பு
  7. 4துண்டு 1அங்குலம் இலவங்கப்பட்டை
  8. 1பிரின்சி இலை
  9. 6ஏலக்காய்
  10. 3கருப்பு பெரிய ஏலக்காய்
  11. 4ஜாவித்ரி Hindi, mace English, ஜாதிக்காயின் வெளியில் இருக்கும் நார்கள் (Mace is the net-like extra seed covering that covers the nutmeg's seed coat
  12. ½தேக்கரண்டி கருன்ச் சீரகம் (பிரியாணி ஜீரா)
  13. 1 கப் வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது
  14. 1 மேஜைகரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
  15. 2பச்சை மிளகாய் நீளமாக நறுக்கியது
  16. மற்றவை:
  17. 2கப் தக்காளி பொடியாக நறுக்கியது
  18. ½கப் முள்ளங்கி தூண்டுகள்
  19. ½தேக்கரண்டி மஞ்சள் பொடி
  20. 1தேக்கரண்டி காஷ்மீரி சில்லி மிளகாய் பொடி
  21. 1மேஜைகரண்டி சீரகப் பொடி
  22. 1மேஜைகரண்டி தனியா பொடி
  23. 6வற கார மிளகாய்
  24. 1கப் தயிர்
  25. 1தேக்கரண்டி பிரியாணி மசாலா
  26. 1தேக்கரண்டி குங்குமப்பூ
  27. 1மேஜைகரண்டி பால்
  28. 1கப் பாஸ்மதி அரிசி
  29. தேவையான அளவு உப்பு
  30. 2கப் கொத்தமல்லி,பொடியாக நறுக்கியது
  31. 1கப் புதினா, பொடியாக நறுக்கியது
  32. அலங்கரிக்க:
  33. ½கப் வறுத்த முந்திரி(dry roasted)
  34. 2கப் கார்மலைஸ்ட் வெங்காயம்

சமையல் குறிப்புகள்

80 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்

  2. 2

    ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்

  3. 3

    தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்

  4. 4

    மிளகாய் பேஸ்ட் செய்ய 1 கப் வெந்நீரில் மிளகாய்களை 3 மணி நேரம் ஊறவைக்க. மிக்ஸியில் பேஸ்ட் செய்க.
    தக்காளி, முள்ளங்கி துண்டுகளை சேர்த்து மிக்ஸியில் அறைக்க (புரீ(puree)
    குங்குமப்பூவை ஒரு சின்ன கிண்ணத்தில் சூடான பாலில் கரைக்க.
    கார்மலைஸ்ட் வெங்காயம்: (Carmalized onion) குறைந்த நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் சூடான 2 மேஜைகரண்டி நெய்யில் மெல்லியதாக சீவிய வெங்காயம், வறுக்க. சிறிது உப்பு சேர்த்தால் உப்பு வெங்காயத்தில் உள்ள தண்ணியை வேளியே எடுக்கும். கார்மலைஸ் ஆகும்.

  5. 5

    மேஜை கரண்டி எண்ணையில் காய்கறிகளை 1 தேக்கரண்டி சக்கரையுடன் 2 நிமிடங்கள் வதக்கி(, தனியே எடுத்து வைக்க. நான் காய்கறிகளை மைக்ரோவேவ் 3 நிமிடம் செய்தேன்,
    பிரியாணி செய்ய: மிதமான நெருப்பின் மேல் ஒரு அடி கனமான பாத்திரத்தில் 1 மேஜை கரண்டி நெய் சூடான பின் கிராம்பு, இலவங்கப்பட்டை, பிரின்சி இலை,ஏலக்காய், ஜாவித்ரி, கருன்ச் சீரகம் (பிரியாணி ஜீரா) ஓவ்வொன்றாக சேர்த்து வதக்க-2 நிமிடங்கள்..
    வெங்காயம் சேர்த்து பிரவுன் ஆகும் வரை வதக்க—3 நிமிடங்கள். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க.

  6. 6

    மிளகாய் பேஸ்ட் சேர்த்து கிளற.. புதினா, கொத்தமல்லி சிறிது சிறிதாய் சேர்த்து வதக்க எல்லா ஸ்பைஸ் பொடிகளையும் சேர்த்து கிளற.

    தக்காளி முள்ளங்கி கலவை சேர்த்து நன்றாக 4-5 நிமிடங்கள் கொதிக்க வைக்க. மஞ்சள் பொடி, காஷ்மீரி சில்லி, தேவையானஉப்பு சேர்த்து கிளற, கொதிக்கட்டும;. எண்ணை பிரியட்டும் தயிர், கரம் மசாலா பொடி சேர்க்க. ஒரு நிமிடம் வேகட்டும். 2 கப் கொதிக்கும் நீர் சேர்க்க. கொதிக்கட்டும். மீதி டம் முறையில் பிரியாணி செய்ய வேண்டும்.

  7. 7

    மீடியம் ஹை விலேமில் அடிகனமான பாத்திரத்தில் கொதிக்கும் 5 கப் நீரில் ¼கப் புதினா, ¼கப் கொத்தமல்லி, அரிசி சேர்த்து மேஜை கரண்டி நெய்யுடன் 5 நிமிடங்கள் வேகவைக்க. அரிசி பாதி வெந்தால் போதும். உப்பு சேர்க்க. வெளியே எடுத்து வடிக்க. வடித்த அரிசியை வெந்து கொண்டிருக்கும் தக்காளி கலவை பாத்திரத்தில் சேர்க்க. அரிசியை பரவலாக போட்டு அழூத்துங்கள். கிளறாதீர்கள், அரிசி மேல் வதக்கிய பட்டாணி கேரட் ஸ்குவாஷ் லேயர் செய்தேன். மேலே ¼கப் புதினா. ¼கப் மல்லி பரவலாக சேர்க்க.

  8. 8

    வறுத்த பாதி கார்மலைஸ்ட் வெங்காயம், வறுத்த முந்திரி பரவலாக மேலே போடுக பாலில் கரைந்த குங்குமப்பூ சேர்க்க. மூட.

    ஹை நெருப்பின் மேல் அடிகனமான ஸ்கிலேட் (cast iron skillet) வைத்து சூடு செய்க. cast iron skillet உஷ்ணம் ரிடைன் செய்யும் பிரியாணி பாத்திரத்தை இதன் மேல் வைக்க.மூடியை நன்றாக சீல் செய்க. நான் மேலே வ்வாயிலால் (foil) மூடி கவர் செய்து கயிரால் கட்டினேன் 2 நிமிடங்கள் பின் மிகவும் குறைந்த நெருப்பின் மேல் 20-30 நிமிடங்கள் வைக்க. அடுப்பை அணைக்க.

  9. 9

    அடுப்பு மேலேயே 15 நிமிடங்கல் இருக்கட்டும்; பின் வெளியே எடுத்து, திறந்து மீதி நெய் சேர்த்து கிளற. உதிரி உதிரியான வாசனை தூக்கும் டம் பிரியாணி சுவைக்க தயார். ருசிக்க. வெளியே எடுத்து மூடியை திறந்து கிளறி பரிமாறும் போலிர்க்கு மாற்றுக. மேலே மல்லி, மீதி பாதி வறுத்த முந்திரி, வறுத்த வெங்காயம் தூவுக.,
    30 நிமிடங்கள் ஆன பின் எல்லா சுவைகளும், வாசனைகளும் ஓன்று சேர்ந்த பின் பரிமாறுக. பச்சடி, சட்னி. வறுவல் கூட பரிமாறுக அழகிய சுவையான சத்தான டம் பிரியாணி ருசிக்க

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes