மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)

#3m
மிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம்
மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3m
மிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 50 கிராம் ரவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடியாக்கிக் கொள்ள வேண்டும்
- 2
அடுத்து ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நெய் சூடானவுடன் அதில் நாம் அரைத்து வைத்துள்ள ரவை தூளை சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வறுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
- 3
பிறகு ஒரு பழுத்த மாம்பழத்தை தோலை நீக்கிவிட்டு பழத்தை மட்டும் பொடியாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 4
பிறகு ஒரு கடாயில் ஒரு டம்ளர் பால் சேர்த்து அதில் நாம் அரைத்து வைத்துள்ள மாம்பழத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு 2 நிமிடம் வரை வேக வைக்க வேண்டும்
- 5
மாம்பழம் பாலுடன் சேர்ந்து நன்றாக வெந்து இருக்கும் அந்த சமயத்தில் 5 டேபிள்ஸ்பூன் சர்க்கரை தூளை அதனுடன் சேர்த்து நன்றாக மீண்டும் கிளறி விட வேண்டும்
- 6
அடுத்து நாம் நெய்யில் வதக்கி வைத்திருக்கும் ரவை தூளை ஒரு ஒரு கரண்டியாக சேர்த்து கட்டி விழாமல் நன்றாக கிளறி விட வேண்டும்
- 7
கட்டி விலகாமல் கிளறிக் கொண்டே இருந்தோமானால் தண்ணீர் பதத்திலிருந்து கலவை கெட்டியாக ஆரம்பிக்கும்
- 8
நாம் கரண்டியை வைத்து கிண்டும் பொழுது கரண்டி எந்த பக்கம் எல்லாம் செல்கின்றதோ அதே பக்கம் மாவும் பின் தொடர்ந்து வரும் அளவிற்கு கெட்டியாக மாவு கையில் ஒட்டாத அளவிற்கு நன்றாக வரும் வரை கிளறி விட வேண்டும்
- 9
பிறகு 1 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி விட்டு கடாயில் ஒட்டாமல் நன்றாக வெந்து வந்ததும் அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆற வைக்கலாம்
- 10
பிறகு கைகளில் லேசாக நெய் தடவிக் கொண்டு நாம் ஒரு ஒரு உருண்டைகளாக பிடித்து அதனை நமக்கு பிடித்த வடிவம் போல் வடிவமைத்துக் கொள்ளலாம்
- 11
எல்லாவற்றையும் நமக்கு பிடித்த வடிவத்தில் வடிவமைத்துக் கொண்டு ஒரு பிளேட்டில் எடுத்துக்கொள்ளலாம்
- 12
இப்போது ஐந்து பாதாம் மற்றும் ஐந்து பிஸ்தா இவற்றை பொடியாக நறுக்கி அதனை பேடாவின் நடுவில் அலங்கரித்துக் கொள்ளலாம்
- 13
இதோ மிகவும் குறைவான நேரத்தில் மிகவும் ருசியான மேங்கோ மில்க் பேடா தயார் வாங்க சுவைக்கலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மில்க் பேடா (Milk peda)
மில்க் பேடா குக்பேடில் என்னுடைய 700 ஆவது பதிவு. மில்க் பேடா செய்வது கொஞ்சம் கஷ்டம், ஆனால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். கெட்டியான பாலில் செய்வதால் சத்துக்கள் நிறைந்தது. இதுவும் ஒரு கோவை ஸ்பெஷல் ஸ்வீட் தான்.#Vattaram Renukabala -
-
ஒரே மாம்பழத்தில் மேங்கோ ஜூஸ் மற்றும் மேங்கோ டெஸட்
#vattaramWeek 8கிருஷ்ணகிரி என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது மாம்பழங்கள் தான் அந்த அளவிற்கு அங்கு மாம்பழங்கள் மிகவும் பிரபலம் மாம்பழங்களில் ஆன பல வகை ஜுஸ்களும் பல வகை இனிப்பு வகைகளும் அங்கு ஏராளமாக கிடைக்கும் Sowmya -
-
-
-
-
-
-
Mango milkshake topped with honey
#3m அனைவரும் விரும்பி சாப்பிடும் மாம்பழ மில்க் ஷேக் Vaishu Aadhira -
-
-
-
-
ஆற்காடு மக்கன் பேடா(Arcot makkan peda)
#vattaram குலோப் ஜாமுன் மிக்ஸ் வைத்தே அருமையான மக்கன் பேடா செய்யலாம். மிகவும் சுவையான , ஜூசியான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். Deiva Jegan -
தார்வாட் பேடா (Dharwad peda recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் ஸ்வீட் இந்த தார்வாட் பேடா மிகவும் பிரபலம் .கோதுமை மாவு சேர்த்து செய்யும் ரெசிபி. #karnataka Azhagammai Ramanathan -
-
Mango Milk Fudge (Mango milk fudge Recipe in tamil)
#mango#Nutrient3மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . Shyamala Senthil -
-
-
டபுள் டக்கர் மாம்பழ லட்டு (Double Takkar Mango Laddu)
#3mவெளியில் மாம்பழத்தின் தித்திக்கும் சுவையுடனும் உள்ளே நட்ஸ் ட்விஸ்ட் வைத்து செய்த சுவையான டபுள் டக்கர் மாம்பழ லட்டு 😋😋😋 Kanaga Hema😊 -
-
-
-
-
-
மேங்கோ ஃப்ரூட்டி\ஹோம் மேட் (Mango frooti Recipe in Tamil)
#mangoமாம்பழத்தை வைத்து நாம் வீட்டிலேயே ஃப்ரூட்டி செய்யலாம். கடைகளில் வாங்குவதால் அதில் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்கு பிரிசர்வேட்டிவ் சேர்த்திருப்பார்கள். இது உடலுக்கு நல்லதல்ல. ஆகையால் நாம் இப்பொழுது மாம்பழ சீசன் ஆகையால் அதோடு மட்டுமில்லாமல் வெயில் காலமாக இருப்பதால் ஃப்ரூட்டி செய்து வைத்து அருந்தலாம். Laxmi Kailash -
-
-
More Recipes
கமெண்ட் (4)