காளான் மசாலா

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#vattaram

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் ல மிகவும் பிரபலமான ஒரு உணவு சாலையோரங்களில் சின்ன சின்ன பேக்கரி கடைகள் முதல் கொண்டு தள்ளுவண்டி கடையில எங்க பார்த்தாலும் மாலை நேரத்தில சுடச் சுட இத சாப்பிட அவ்வளவு கூட்டம் வெறும் 25 ரூபாய் ல அவ்வளவு ருசியை கொடுக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. பக்கோடா செய்ய:
  2. 1/4 கிலோ முட்டைக்கோஸ்
  3. 3 ஸ்பூன் மைதா
  4. 2 ஸ்பூன் கார்ன்ப்ளார்
  5. 1 ஸ்பூன் அரிசி மாவு
  6. 3 ஸ்பூன் கடலைமாவு
  7. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 1/2 ஸ்பூன் பச்சை மிளகாய் விழுது
  9. 3/4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  10. 1/4 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  11. தேவையானஅளவுஉப்பு
  12. எண்ணெய் பொரிப்பதற்கு
  13. சாஸ் செய்ய:
  14. 1 வெங்காயம்
  15. 2பச்சை மிளகாய்
  16. 4பல் பூண்டு
  17. 2 ஸ்பூன் தக்காளி கெட்சப்
  18. 1 ஸ்பூன் க்ரீன் சில்லி அல்லது ரெட் சில்லி சாஸ்
  19. 1 ஸ்பூன் சோயா சாஸ்
  20. 1_1/2 ஸ்பூன் கார்ன் ப்ளார்
  21. 1/2 கப்+ 3 ஸ்பூன் தண்ணீர்
  22. உப்பு தேவையான அளவு
  23. 1/4 ஸ்பூன் கருப்புமிளகுத்தூள்
  24. 1/4 ஸ்பூன் சாட் மசாலா தூள்
  25. 1/2 ஸ்பூன் கறிமசால் தூள்
  26. 1/2 ஸ்பூன் சர்க்கரை
  27. 1கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை
  28. 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    முட்டை கோஸை படத்தில் காட்டியவாறு நறுக்கி கொள்ளவும் பின் அதை நன்றாக கழுவி தண்ணீரை வடிகட்டி கொள்ளவும் அந்த ஈரபதமே போதும் அதனுடன் உப்பு இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் விழுது மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் மைதா அரிசி மாவு கார்ன்ப்ளார் கடலைமாவு ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் போண்டா மாவு மாதிரி கலக்க கூடாது காயுடன் மாவு கலந்து படத்தில் காட்டியவாறு உதிரியாக இருக்க வேண்டும்

  2. 2

    பின் சூடான எண்ணெயில் பரவலாக போட்டு வேகவிடவும் கைகளில் சிறிது எண்ணெய் தடவி கொண்டு மாவை எடுத்து உதிர்த்து பரவலாக போடவும்

  3. 3

    பின் நன்றாக சிவக்க விட்டு எடுக்கவும்

  4. 4

    இவ்வாறு அனைத்து முட்டைகோஸ் கவலையையும் சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

  5. 5

    பின் சாஸ் செய்ய முதலில் வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  6. 6

    வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி கெட்சப் சோயா சாஸ் சில்லி சாஸ் சேர்த்து நன்கு கிளறவும் கார்ன் ப்ளார் உடன் தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  7. 7

    பின் கரைத்த கார்ன்ப்ளார் கரைசலை ஊற்றி நன்கு கிளறவும் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து கிளறவும் வேகமாக வைத்தால் சீக்கிரம் கெட்டியாகி விடும் கார்ன் ப்ளார் பச்சை வாசனை போகாது சாஸ் ருசி இருக்காது நன்கு கொதிக்கும் போது உப்பு சர்க்கரை மிளகுத்தூள் கறி மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும் கைவிடாமல் கிளற வேண்டும்

  8. 8

    பின் சாஸ் இந்த பதத்தில் திக்காக வந்ததும் பொரித்த பக்கோடாவை சேர்த்து நன்கு கிளறவும்

  9. 9

    பின் கொத்தமல்லி தழை தூவி நன்கு கிளறி இறக்கவும்

  10. 10

    இதை பேப்பர் கப்பில் போட்டு மேலே நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தழை தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும்

  11. 11

    சுவையான ரோட் சைட் காளான் மசாலா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes