தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 200கிராம் கடலை பருப்பு
  2. 8-10பூண்டு பல்
  3. 2கொத்து கறிவேப்பிலை
  4. 11\2ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. தேவையான அளவு உப்பு
  6. தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கடலைப்பருப்பை நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி 1 முதல் 2 மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    பிறகு அதனை நன்கு வடிகட்டி, ஒரு காட்டன் துணியில் விரித்து பரப்பி 15 நிமிடம் நன்கு உலர வைக்கவும்

  3. 3

    கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் ஊற வைத்த பருப்பினை சிறிது சிறிதாக போட்டு நன்கு சிவக்க பொரித்து எடுக்கவும். (கவனம் கருகி விடாமல் சிறிது சிவந்து உடனே எடுத்து விடவும்)

  4. 4

    இதேபோல் எல்லா பருப்புகளையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பொரித்து எண்ணெய் வடித்து எடுத்துக் கொள்ளவும்

  5. 5

    பூண்டுப் பல்லை, தோலுடன் ஒன்றிரண்டாகத் தட்டி எடுத்துக் கொள்ளவும். பொரித்து விட்டு மீதம் இருக்கும் அதே எண்ணெயில் கறிவேப்பிலை கொத்து இரண்டு சேர்த்து அதனுடன் இடித்த பூண்டு பல்லை சேர்த்து நன்கு பொரித்து பருப்புடன் சேர்க்கவும்

  6. 6

    இப்போது காரத்திற்கு தேவையான அளவு மிளகாய்த்தூள் சேர்க்கவும்

  7. 7

    தேவைக்கேற்ப தூள் உப்பு சேர்த்து அனைத்தையும் ஒரு சேர நன்கு குலுக்கி குலுக்கி விட்டு சாப்பிடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes