மாங்காய் ஊறுகாய்

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#colours1

சீசனில் கிடைக்கும் மாங்காயை பயன்படுத்தி ஒரு வருடம் ஆனாலும் கெடாத மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்

இதற்கு மாங்காயை காயாக இருப்பது நல்லது மஞ்சள் நிறம் இருந்தாலும் கெட்டியாக இருக்க வேண்டும்

கிலோ கணக்கில் சொல்லி கை அளவில் பொருட்களை சேர்க்கும் போது கூட, குறைய இருக்கும் அதனால் புதியதாக செய்பவர்கள் கூட இதை சரியான பக்குவத்தில் செய்ய சரியான அளவுகள் உடன் கொடுத்திருக்கிறேன் இதை நானே பலமுறை விதவிதமாக அளந்து சரியான அளவை கொடுத்திருக்கிறேன்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
12 பரிமாறுவது
  1. 6 கப் நறுக்கிய மாங்காய்
  2. 1/2 கப் கல் உப்பு
  3. 3/4 கப் தனி மிளகாய்த்தூள்
  4. 20 கிராம் வெந்தயம்
  5. 40 கிராம் கடுகு
  6. 2 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள்
  7. 1_1/4 கப் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    மாங்காயை இந்த பதத்தில் இருக்குமாறு பார்த்துக் வாங்கி கழுவி தண்ணீரை துடைத்து ஒரு மணி நேரம் வரை வெயிலில் உலர்த்தி பின் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    பின் கல் உப்பை வெறும் வாணலியில் வறுத்து அம்மியில் வைத்து பொடித்து கொள்ளவும் அதை நறுக்கிய மாங்காயுடன் சேர்த்து நன்கு குலுக்கி இரண்டு நாட்கள் வரை ஊறவிடவும் தினமும் ஒரு நான்கு மணி நேரம் வரை வெயிலில் வைக்கவும் மேல்பாகத்தை ஒரு மஸ்லின் துணியால் கட்டி பின் வெயிலில் வைக்கவும்

  3. 3

    பின் வெறும் வாணலியில் வெந்தயத்தை இளஞ் சிவப்பாக வறுத்து எடுக்கவும் பின் அதே வெறும் வாணலியில் கடுகை சேர்த்து படபடவென பொரியும் வரை விட்டு பின் வெந்தயத்துடன் சேர்த்து அம்மியில் வைத்து பொடி செய்து கொள்ளவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் இந்த ஊறவைத்த மாங்காயை சேர்த்து ஐந்து நிமிடம் வரை வேகவிடவும் நன்றாக வதக்கவும் பின் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும் மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் வரை வதக்கவும் (மூடி வைக்க கூடாது நீராவியில் தண்ணீர் வந்து ஊறுகாய் கெட்டு விடும்)பின் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டிலே வெந்தய கடுகு பொடி சேர்த்து பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும் சூடு ஆறும் வரை நன்றாக கிளறி விடவும் நன்றாக ஆறியதும் (இரண்டு மூன்று மணி நேரம் வரை ஆறவிடவும்) மூடி வைக்கவும்

  5. 5

    கிளறி இறக்கும் போது எண்ணெய் இல்லாதது போல தெரியும் மறுநாள் இந்த மாதிரி எண்ணெய் பிரிந்து வரும்

  6. 6

    மீண்டும் இதை ஒரு முறை நன்றாக கிளறி (கழுவி சுத்தம் செய்து கண்ணாடி பாட்டிலை வெயிலில் சிறிது நேரம் வைத்து எடுக்கவும்) சுத்தமான கண்ணாடி பாட்டிலில் நிரப்பவும் பாட்டிலில் போடும் போது எண்ணெய் மேலே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்

  7. 7

    சுவையான ஆரோக்கியமான மாங்காய் ஊறுகாய் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes