அரைக்கீரை பருப்பு, சாம்பார்(நோஆயில்)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#AsahiKaseilndia
சாதாரணமாக எல்லா கீரைகளிலும் சத்துக்கள் அதிகம். அதிலும் அரைக்கீரையில் உடலின் பலத்தை அதிகரிக்கும் சத்து உள்ளது. இதை தினமும் சமையல் செய்து சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல் பிரச்னை வராது.குடல் புண்கள் விரைவில் குணமாகும்.இரும்புச்சத்து உள்ளதால் நரம்புத்தளர்ச்சி யை சரிசெய்ய உதவுகின்றது.மேலும் து.பருப்பு சேர்த்துசெய்வதால் புரோட்டீன் சத்தும் கிடைக்கின்றது.கீரையில் 1டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் ,அதன் பசுமை நிறம் மாறாது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
6பேர்
  1. 1சிறியகட்டுஅரைக்கீரை
  2. 1கப்து.பருப்பு வேகவைத்தது
  3. 1டேபிள்ஸ்பூன்வெங்காயம் பொடியாக நறுக்கினது
  4. 1ஸ்பூன்காஷ்மீரி மிளகாய் தூள்
  5. 1டேபிள்ஸ்பூன்சாம்பார் பொடி
  6. 1டீஸ்பூன்ம.தூள்
  7. தேவையான அளவுஉப்பு ருசிக்கு
  8. தேவையான அளவுதண்ணீர்
  9. 1டீஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    து.பருப்பை ம.தூள்,உப்பு போட்டு மைய வேகவிடவும்.நறுக்கின கீரையில் சிறிது சர்க்கரை போடவும்.

  3. 3

    பிறகு கீரையில் வெங்காயம், ம.தூள்,சாம்பார் பொடி,காஷ்மீரி மிளகாய் தூள்,உப்பு,சிறிது தண்ணீர் விட்டு மூடாமல் வேகவிடவும்.கீரைவெந்ததும்,மைய வேக வைத்த து.பருப்பை போடவும்.

  4. 4

    பிறகு ஒன்று சேர கொதித்ததும் இறக்கிவிடவும்.சுவையான,ஆரோக்கியமான,வித்தியாசமான, "அரைக்கீரை பருப்பு சாம்பார்",தயார். இதற்கு தாளிப்பும்,எண்ணெயும் தேவையில்லை.

  5. 5
  6. 6
எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes