தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. 250 கிராம் மைதா
  2. 1 முட்டை
  3. 1 டீ ஸ்பூன் ஈஸ்ட்
  4. 100 மிலி பால் மிதமான சூடு
  5. 4டே ஸ்பூன் சீனி +1 டீ ஸ்பூன்
  6. 40 கிராம் பட்டர்
  7. 1/2 டீ ஸ்பூன் உப்பு
  8. 1/4 கப் தேங்காய்
  9. 10-15 பாதாம்
  10. 10-15 வால் நட்
  11. 25 கிராம் டூட்டி பிருட்டி
  12. 1/4 கப் வெல்லம்
  13. 1முட்டை + 4 டே ஸ்பூன் பால் கலந்தது

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாலுடன் ஈஸ்ட் சீனி சேர்த்து 15 நிமிடம் ஆக்ட்டிவெட் செய்யவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் மைதா,முட்டை,பட்டர் சேர்க்கவும்

  3. 3

    கூடவே உப்பு,சீனி, ஈஸ்ட் பால் சேர்த்து கொள்ளவும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    ஒரு 15 நிமிடம் நன்கு கலந்து கொள்ளவும்

  5. 5

    பின் பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் மாவை வைத்து மேலே எண்ணெய் தடவி

  6. 6

    பின் ஒரு ஈரமான துணி போட்டு 1 -1/2 மணி நேரம் ப்ரூப் பண்ண வைக்கவும்

  7. 7

    பாதாம் மற்றும் வால்நட்டை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்

  8. 8

    காடாயில் தேங்காய் சேர்த்து,கூடவே பொடித்த பாதாம் மற்றும் வால்நட் சேர்த்து

  9. 9

    பொடித்த வெல்லம் சேர்த்து அடுப்பை அனைத்து பின் டூட்டி பிருட்டி சேர்த்து கலந்து கொள்ளவும்

  10. 10

    1 -1/2 மணி நேரம் பின் மாவு நன்கு ப்ரூப் ஆகி உள்ளது அதின் நடுவில் ஒரு பஞ்ச் கொடுத்து ஏர் ரிலீஸ் செய்யவும்

  11. 11

    பின் பிரித்து கொள்ளவும்.தனி தனியாக உருட்டி கொள்ளவும்

  12. 12

    பின் மாவு தூவி திரட்டி படத்தில் கொடுத்தது மாதிரி வெட்டி கொள்ளவும்

  13. 13

    அதில் பில்லிங் வைத்து உருட்டி கொள்ளவும்

  14. 14

    பின் பேக்கிங் பேனில் பட்டர் மட்டும் கிரீஸ் பண்ணி அதில் இதை வைத்து

  15. 15

    மறுபடியும் ஈர துணி போட்டு 30 நிமிடம் ப்ரூப் செய்யவும்

  16. 16

    பின் அதில் முட்டை மற்றும் பால் சேர்த்து பிரஷ் பண்ணவும்

  17. 17

    ஓவெனை 15 நிமிடம் 180C ப்ரீ ஹீட் செய்யவும். பின் அதில் வைத்து 30 நிமிடம் 180C பேக் செய்து எடுக்கவும்.
    பின் அதில் பட்டர் பிரஷ் செய்யவும்

  18. 18

    சுவையான உல் ஸ்வீட் பிரட் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes