எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணிநேரம்
6 நபர்கள்
  1. பிளாக் ஃபாரஸ்ட் கேக் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
  2. ஒரு கப்மைதா
  3. 6 டேபிள்ஸ்பூன் கோகோ பவுடர்
  4. ஒரு டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா
  6. அரை டீஸ்பூன் உப்பு
  7. ஒரு கப் சர்க்கரை
  8. முக்கால் கப் பால்
  9. அரை கப் புளிக்காத தயிர்
  10. கால் கப் வெண்ணை
  11. ஒரு டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  12. கேக்கிற்கு கிரீம் தயாரிக்க தேவையான பொருட்கள்:
  13. ஒரு கப் விப்பிங் க்ரீம்
  14. ஒரு டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ்
  15. தேவையான அளவுசர்க்கரை தண்ணீர்
  16. டார்க் காம்பவுண்ட் சாக்லேட் துருவல்

சமையல் குறிப்புகள்

2 மணிநேரம்
  1. 1

    முதலில் கேட்க தயாரிக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து குக்கரில் 45 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் (இந்த செய்முறையை ஏற்கனவே அப்லோட் செய்துள்ளேன்). வேகவைத்து எடுத்த கேக்கை மூன்றாக கட் செய்து கொள்ள வேண்டும் (படத்தில் காண்பித்தவாரு)

  2. 2

    க்ரீமை பீட் செய்யப்போகும் பவுல் மற்றும் பீட்டரின் கம்பிகளை பிரிட்ஜில் நன்கு கூலிங் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த பௌலில் ஒரு கப் க்ரீன் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதன் பின்னர் ஸ்பீடு ஒன்றில் வைத்து பீட்டரால் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    பாதி கிரீம் அடித்து அலைபோல் உருவாக்கியதும் ஒரு டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ் சேர்த்து மீண்டும் ஸ்டிஃப் பீக் வரும்வரை நன்கு க்ரீமை பீட் செய்து கொள்ள வேண்டும்.

  4. 4

    க்ரீம் ஸ்டிஃப் பீக் வந்துவிட்டதா என்று பார்க்க பவுலை தலைகீழாக கவுத்தினால் க்ரீம் கீழே கொட்ட கூடாது. அதன்பிறகு ஒரு ரொட்டேடிங் டேபிளில் அல்லது பிளேட்டில் சிறிதளவு க்ரீமை தடவிக் கொள்ள வேண்டும்.

  5. 5

    அதன்மேல் முதல் லேயர் கேக்கை வைத்து அதன் மேல் சர்க்கரை தண்ணீரை கேக் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும்.

  6. 6

    அதன்பிறகு நாம் தயார் செய்து வைத்துள்ள க்ரீமை கேக் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும். அதன் மேல் துருவிய சாக்லெட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதேபோல் மற்றவைகளையும் வைத்து செய்து கொள்ள வேண்டும். கடைசி லேயரில் சாக்லேட் துருவலை சேர்க்க வேண்டாம்.

  7. 7

    பிறகு க்ரீமை வைத்து கேட்கின் சைடு பகுதியிலும் க்ரீமை நன்கு தடவிக் கொள்ள வேண்டும்.

  8. 8

    கேக் முழுவதும் நன்கு கிரீமை தடவிய உடன் சாக்லேட் துருவலை கேக் இன் சைடு பகுதிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  9. 9

    அதன் பிறகு நமக்கு விருப்பமான முறையில் கேக்கை அலங்கரித்துக் கொள்ளலாம். ரோஸ் போன்ற டிசைன்களை உருவாக்கி கொள்ளலாம்.

  10. 10

    ரோஸ் டிசைன் மீது செர்ரிப் பழங்களை கொண்டு அலங்கரிக்க வேண்டும். கேடக்கின் சைடு பகுதியிலும் டிசைன்ஸ் போட்டுக்கொள்ளலாம்.

  11. 11

    பேக்கரிகளில் கிடைக்கும் சுவையான பிளாக் ஃபாரஸ்ட் கேக் வீட்டிலேயே தயாராகிவிட்டது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sara's Cooking Diary
அன்று
Madurai

Similar Recipes