தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 25‌0 கிராம் இறால்
  2. 1/2 கைப்பிடி புதினா
  3. 1/2கைப்பிடி கொத்தமல்லி
  4. 1/2 கைப்பிடி கருவேப்பிலை
  5. 1 துண்டு இஞ்சி
  6. 6 பல் பூண்டு
  7. 5பச்சை ‌மிளகாய்
  8. 50 கிராம் சின்ன வெங்காயம்
  9. 1 ஸ்பூன் மல்லி தூள்
  10. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  11. 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  12. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  13. 1/2 ஸ்பூன் சீரகத்தூள்
  14. 50 மில்லி எண்ணெய்
  15. தேவையான அளவுஉப்பு
  16. தாளிக்க:
  17. 2 கிராம்பு
  18. 1பிரஞ்ச் இலை
  19. 1/2 ஸ்பூன் சோம்பு
  20. 1 ஸ்டார் பூ
  21. 1 பட்டை

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் இறாலை சுத்தம் செய்து எடுக்கவும் பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்

  2. 2

    பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சை ‌மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும் பிறகு அதை மிக்சியில் சேர்த்து அரைத்து எடுக்கவும்

  3. 3

    பிறகு தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து அதில் ஊறவைத்த இறாலை சேர்த்து வறுத்து எடுக்கவும்

  4. 4

    பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு, சோம்பு, பிரஞ்ச், ஸ்டார் பூ சேர்த்து வதக்கவும்

  5. 5

    பிறகு வதங்கியதும் அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்

  6. 6

    பிறகு அதில் அரைத்து வைத்துள்ள புதினா பேஸ்ட், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

  7. 7

    பிறகு கிரேவி பதம் வந்ததும் அதில் வறுத்து இறாலை சேர்த்து 3 நிமிடம் வேகவிடவும் பிறகு அதில் சீரகத்தூள் சேர்த்து இறக்கவும்

  8. 8

    இப்பொழுது சுவையான கிரீன் ப்ரான் மசாலா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes