அடைஉப்புமா

Senbagavalli
Senbagavalli @cook_30868637

#keerskitchen வழக்கமான உப்புமாவில் இருந்து மிகவும் வேறுபட்ட சுவையுடையது

அடைஉப்புமா

#keerskitchen வழக்கமான உப்புமாவில் இருந்து மிகவும் வேறுபட்ட சுவையுடையது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்
  1. 1 1/2 கப் அரிசி
  2. 1/2கப் கடலைப் பருப்பு
  3. 8மிளகாய் வற்றல்
  4. தேவையான அளவுஉப்பு
  5. தாளிக்க
  6. கடுகு
  7. உ.பருப்பு
  8. கருவேப்பிலை
  9. 100 கிராம் சின்ன வெங்காயம்)(நறுக்கியது)
  10. 1/4கப்நல்ல எண்ணெய்
  11. ஒரு மூடிதேங்காய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரிசி மற்றும் பருப்பை இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்

  2. 2

    ஊறவைத்த கலவையுடன் மிளகாய் வற்றல் உப்பு சேர்த்து ரவை பதத்தில் அரைக்கவும்.

  3. 3

    அடிகனமான பாத்திரம் அல்லது இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
    எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு கடுகு வெடித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து கிளறவும்.மெதுவாக நீர்ச்சத்து குறைந்து உதிர்ந்து வரும்.

  5. 5

    சிறிது எண்ணெய் ஊற்றி மேலும் கிளறிக்கொண்டே இருக்கவும்.

  6. 6

    நன்கு வெந்து ரவை பதத்தில் முழுவதும் உதிர்ந்து வருகையில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Senbagavalli
Senbagavalli @cook_30868637
அன்று

Similar Recipes