குடைமிளகாய் மசாலா🫑(Capsicum Masala)

Kalaiselvi
Kalaiselvi @cook_26869145

#COLOURS2
குடைமிளகாய் மசாலா ரெசிபி மிகவும் ஈஸியாகவும் சிம்பிளாகவும் செய்து விடலாம். சப்பாத்தி, பூரி மற்றும் தோசை உடன் சேர்த்து சாப்பிட அருமையான காம்பினேஷன்....

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
6 நபர்
  1. 2குடைமிளகாய் நறுக்கியது
  2. 2பெரிய வெங்காயம் நறுக்கியது
  3. 2தக்காளி நறுக்கியது
  4. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  5. 1 ஸ்பூன் வரமிளகாய் தூள்
  6. 1ஸ்கூல் மல்லித்தூள்
  7. 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  8. 1 ஸ்பூன் உப்பு
  9. 7முந்திரிப் பருப்பு
  10. 1/2 ஸ்பூன் கசகசா
  11. 1/2 ஸ்பூன் சோம்பு
  12. 1/2 ஸ்பூன் சீரகம்
  13. சிறிதுகொத்தமல்லி இலை
  14. 5 ஸ்பூன் ரீஃபைண்ட் ஆயில்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    குடைமிளகாய் மசாலா செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும்...

  2. 2

    மசாலா அரைக்க:
    ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 2 பட்டை,2 ஏலக்காய்,வெங்காயம், சேர்த்து நன்கு வதக்கவும்.. பிறகு வரமிளகாய்த்தூள், மல்லித்தூள்,கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறவும்......

  3. 3

    பிறகு அதில் தக்காளி கசகசா முந்திரிப்பருப்பு சேர்த்து கிளறவும்...... வதக்கிய மசாலாவை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்......

  4. 4

    ஒரு வாணலியில்1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய குடமிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும்...

  5. 5

    தாளிக்க:
    ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம், இஞ்சி பூண்டு விழுது, அரைத்த மசாலா, உப்பு சேர்த்து. நன்கு கொதிக்க விடவும்.

  6. 6

    மசாலா நன்கு கொதித்தவுடன் அதில் வதக்கிய குடமிளகாயை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு சிறிது கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் அருமையான குடைமிளகாய் மசாலா ரெடி......

  7. 7

    வாங்க சுட சுட குடமிளகாய் மசாலா சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kalaiselvi
Kalaiselvi @cook_26869145
அன்று

Similar Recipes