தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 நபர்கள்
  1. 1 கப் பாஸ்மதி அரிசி
  2. 2-பெரிய வெங்காயம்
  3. 5-பச்சை மிளகாய்
  4. 2-கேரட்
  5. 10-பீன்ஸ்
  6. 1-உருளைக்கிழங்கு
  7. 8 துண்டுகள் காலிபிளவர்
  8. சிறிதளவுமல்லித்தழை புதினா
  9. தேவையான அளவுஉப்பு
  10. 2பட்டை, கிராம்பு-2 ஏலக்காய் பிரிஞ்சி இலை மராட்டி மொட்டு சாஜிரா
  11. 5 தேக்கரண்டிஎண்ணெய்
  12. 4 ஸ்பூன்நெய்
  13. 10முந்திரி
  14. 1ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வெங்காயம் மற்றும் அனைத்து காய்கறிகளையும் பொடிப்பொடியாக அறிந்து கொள்ளவும்

  2. 2

    பட்டை 2 கிராம்பு-2 ஏலக்காய்-2 ஜாதிக்காய் சிறிதளவு பிரிஞ்சி இலை ஒன்று சாஜிரா ஒரு ஸ்பூன் கல்பாசி சிறிதளவு முந்திரி-10 எடுத்துக்கொள்ள வேண்டும்

  3. 3

    முதலில் அடுப்பில் குக்கரை வைத்து அதில் எண்ணை மற்றும் நெய் ஊற்ற வேண்டும் அதில் எடுத்து வைத்த பட்டை கிராம்பு அனைத்தையும் போட வேண்டும் பின்பு நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்

  4. 4

    இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி புதினா இலைகளை சேர்க்க வேண்டும் பின்னர் பொடியாக அரிந்த அனைத்து காய்கறிகளையும் சேர்க்க வேண்டும்

  5. 5

    நன்றாக வதக்கியவுடன் அதில் அரை மணி நேரம் ஊறவைத்த ஒரு கப் பாஸ்மதி அரிசியை சேர்க்க வேண்டும் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்

  6. 6

    நன்றாக கலக்கி தண்ணீர் சிறிது வற்றியவுடன் குக்கரை மூடி ஒரே ஒரு விசில் விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்

  7. 7

    விசில் முற்றிலும் அடங்கியவுடன் குக்கரை திறந்து பார்த்தால் சூப்பரான சுவையான வெண்மையான வெஜ் புலாவ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shaji's lovely world
அன்று

Similar Recipes