வல்லாரைக் கீரை சாதம்

#magazine6 #nutrition
பொதுவாக எல்லா கீரை வகைகளும் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. கண்பார்வைக்கு மிக மிக நல்லது. வல்லாரைக்கீரை நினைவு ஆற்றலுக்கு மிகவும் நல்லது. மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடங்களை மறக்காமல் இருக்க இந்த வல்லாரைக்கீரை செய்து கொடுப்பார்கள். இப்பொழுது உள்ள குழந்தைகள் எல்லாம் கீரைவகைகள் காய்கறிகள் எடுத்துக் கொள்வது இல்லை அதற்கு பதில் பேக்கரி ஐட்டம் இன்ஸ்டன்ட் ஐட்டம் பீசா பர்கர் இப்படித்தான் சாப்பிடுகிறார்கள் இதுபோல் நெய் வாசத்துடன் சுவையாக செய்து கொடுத்தால் கீரையை சுவைத்துச் சாப்பிடுவார்கள். அவர்களின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது நினைவாற்றலுக்கு மிக மிக நல்லது.நமது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், நீண்ட கால மற்றும் குறுகிய கால நினைவாற்றலை மேம்படுத்தவும், நினைவுகளை தக்க வைக்கும் திறனை அதிகரிக்கவும் வல்லாரை சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள். வல்லாரையில் இயற்கையாகவே குளிரூட்டும் தன்மை இருப்பதால் மனதை அமைதியாகவும், பதட்டமில்லாமலும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் மலச்சிக்கல், அல்சைமர் நோய், அனிஸிட்டி பிரச்சனை, கவனக் குறைவு, அழற்சநயை போக்க என்று இதன் நன்மைகள் ஏராளம். மன அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் வல்லாரை கீரை அடிக்கடி சாப்பிடுவது அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு கைப்பிடி வல்லாரைக் கீரையை ஆய்ந்து மூன்று முறை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். 2 பச்சை மிளகாய் 4 பூண்டு பல் கால் ஸ்பூன் சீரகம் கால் ஸ்பூன் வரக்கொத்தமல்லி எடுத்து வைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய 15 சிறிய வெங்காயத்தை எடுத்துக் கொள்ளவும்.
- 2
தாளிக்க ஒரு ஸ்பூன் எண்ணெய்,மற்றும் ரெண்டு ஸ்பூன் நெய்,வறுத்த நிலக்கடலையை தோல்நீக்கியது 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். பாசி பருப்பு வேக வைத்தது கால் கப் அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் ஆயில் விட்டு காய்ந்தவுடன் அதில் சீரகம் வரக்கொத்தமல்லி சேர்த்து பொரியவிடவும். பிறகு பச்சை மிளகாய் ஒன்று,4 பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.லேசாக வதங்கிய பின்பு தண்ணீர் வடித்த கீரையை சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ளவும். இதை ஆற வைத்து மிக்ஸியில் விழுதாக மிகவும் நைசாக அரைத்துக் கொள்ளவும். விழுதை வேறு கப்பில் மாற்றிவிட்டு மிக்ஸி ஜாரை கொஞ்சமாக தண்ணீர் விட்டு கழுவி அந்த தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
இப்போது இன்னொரு வாணலியில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து அதில் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்தவுடன் நிலக்கடலை சேர்த்து வறுக்கவும். லேசாக நிலக்கடலை சிவந்தவுடன் மீதி ஒரு பச்சை மிளகாயை சேர்க்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயத்தை சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும். தீய விட வேண்டாம். மிதமான தீயில் செய்யவும்.
- 5
வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அரைத்த கீரை விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை மீண்டும் நன்கு கலந்து விட்டு கொள்ளவும். மிக்ஸி கழுவிய தண்ணீரை கால் கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளவும். இவற்றுடன் வேகவைத்த பாசிப்பருப்பை 2 டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும். நன்கு கலந்து விட்டு கொள்ளவும்.
- 6
இப்போது ஏற்கனவே வடித்து வைத்துள்ள சாதத்தை இரண்டு கப் அளவிற்கு எடுத்து இந்த கலவையில் சேர்த்து நன்கு கலந்து விடவும். மூடி வைத்து சாதம் நன்கு சூடு ஏறும் வரை 2 அல்லது 3 நிமிடம் வரை வைத்திருக்கவும். உப்பு சரி பார்த்து கொள்ளவும். நெய் தேவையென்றால் சேர்த்துக் கொள்ளவும். சுவையான வல்லாரைக் கீரை சாதம் தயார். கீரை வேண்டாம் என்று சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். நெய் வாசத்துடன் மிகவும் சுவையாக இருக்கும். கூட வடகம் சிப்ஸ் அப்பளம் போன்றவை வைத்துக் கொடுக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கீரை சாம்பார் சாதம் (Keerai sambar satham recipe in tamil)


பாலக் பன்னீர் க்ரேவி (Paalak paneer gravy recipe in tamil)


வல்லாரை கீரை பொரியல்


வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)


கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)


வல்லாரை கீரை பொடி சாதம்(vallarai keerai podi sadam recipe in tamil)


முப்பருப்பு முளைக் கீரை கூட்டு...💪(keerai with mixed dal koottu recipe in tamil)


ராகி பீசா\Ragi pizza (Raagi pizza recipe in tamil)


கீரை சாதம்


முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு... (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)


கீரை மசியல் (Keerai masiyal recipe in tamil)


நூல்கோல் பச்சைப் பட்டாணி பருப்பு குழம்பு(noolkol pattani paruppu kulambu recipe in tamil)


பசலைக்கீரை பாசிப்பருப்பு சாதம்


முருங்கை கீரை தக்காளி ரசம் (Murunkai keerai thakkaali rasam recipe in tamil)


முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil)


வல்லாரைக் கீரை ஆம்லெட் (Vallaarai Keerai Omelette)


கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)


மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)


வரகு அரிசி வல்லாரை கீரை சாதம்(varakarisi vallarai keerai satham) #chefdeena


திணை அரிசி தக்காளி சாதம்(thinai tomato rice recipe in tamil)


பாலாக்கீரை பாசிப்பருப்பு பால் கூட்டு🥗🍶


தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)


அரை கீரை பாசி பருப்பு சாதம் (Araikeerai paasiparuppu satham recipe in tamil)


மிளகு முட்டை ஆம்லெட் (Milagu muttai omelette recipe in tamil)


மணத்தக்காளி கீரை கூட்டு (Manathakkali keerai kootu recipe in tamil)


மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு


முருங்கைக்கீரை ரசம்


பீட்ரூட் கீரை சாதம் (Beetroot leaves rice) (Beetroot keerai satham recipe in tamil)


கீரை சன்னா கீ ரைஸ்


பொன்னாங்கண்ணி கீரை பொரியல்

கமெண்ட் (2)