சில்லி சோயா

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#magazine1 சோயாவில் நிறைய சத்துக்கள் உள்ளது.. குழந்தைகளுக்காக இது மாதிரி நான் செய்துள்ளேன்..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 1 கப்சோயா
  2. 1ஸ்பூன் கார்ன்ஃப்ளார்
  3. 1ஸ்பூன் மைதா
  4. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  6. 1சிட்டிகை புட் கலர்
  7. தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்
  8. 4பல் பூண்டு
  9. 1 வெங்காயம்
  10. 1சிறிய குடை மிளகாய்
  11. 1ஸ்பூன் டொமேட்டோ சாஸ்
  12. 1ஸ்பூன் ரெட் சில்லி சாஸ்
  13. சிறிதளவுவெங்காயத்தாள்
  14. தேவையான அளவு உப்பு
  15. 1பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    சோயாவை சூடான தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து நன்றாக பிழிந்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    அதனுடன் கார்ன்ஃப்ளார், மைதா, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், ஃபுட் கலர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்..

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோயாவை பொரித்து எடுக்கவும்

  4. 4

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு, வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  5. 5

    அதனுடன் சில்லி சாஸ், டொமேட்டோ சாஸ், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.. வதங்கியதும் அதோடு சோயாவையும் சேர்த்து வதக்கவும்..

  6. 6

    இறுதியாக வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும்..

  7. 7

    இப்போது சுவையான சில்லி சோயா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes