வாழைப்பூ கோலா உருண்டைக் குழம்பு (banana flower dal curry)

Nisa
Nisa @Nisa3608

#banana
வாழைப்பூவில் கோலா
உருண்டைகள் செய்து குழம்பும் செய்யும் முறையை கூறியுள்ளேன். கோலா உருண்டைகள் தயாரித்து அதையே சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். குழம்பில் சேர்த்து சாப்பிட்டாலும் இன்னும் சுவையாக இருக்கும். இது ஒரு ஹெல்தியான டிஷ்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 நபர்கள்
  1. 50 கிராம் கடலை பருப்பு
  2. 1 எலுமிச்சை அளவு புளி
  3. 1தேக் கரண்டி துருவிய தேங்காய்
  4. 1/2 தேக்கரண்டி கசகசா
  5. தேவையான அளவு ஊறவைக்க மோர்
  6. 1 கப் சுத்தம் செய்த வாழைப்பூ
  7. 1 பச்சை மிளகாய்
  8. 1 தேக்கரண்டி சோம்பு
  9. 1 தேக்கரண்டி சீரகம்
  10. 1/4 தேக்கரண்டி மிளகு
  11. 1 தேக்கரண்டி இஞ்சி
  12. தேவையான அளவு உப்பு
  13. 2 தேக்கரண்டி எண்ணெய்
  14. 1/2 தேக்கரண்டி கடுகு
  15. 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
  16. 1/2 தேக்கரண்டி வெந்தயம்
  17. 1 கொத்து கருவேப்பிலை
  18. 10சின்ன வெங்காயம்
  19. 1 பெரிய அளவு தக்காளி
  20. 1 தேக்கரண்டி குழம்பு தூள்
  21. 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  22. 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  23. தேவையானஅளவு நறுக்கிய கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    பவுலில் உழுத்தம் பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.இன்னொரு பவுலில் புலி மற்றும் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். வாழைப்பூவை சுத்தம் செய்து வைக்கவும்.

  2. 2

    சுத்தம் செய்த வாழைப்பூவை மோரில் பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் கசகசா சேர்க்கவும். இதை மையாக அரைத்து எடுக்கவும்.

  3. 3

    மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பருப்பு வாழைப்பூ பச்சை மிளகாய் சோம்பு சீரகம் மிளகு இஞ்சி தேவையான அளவு உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். இதிலிருந்து சிறிய உருண்டைகள் பிடிக்கவும்.

  4. 4

    பாத்திரத்தில் எண்ணெய் சூடானதும் கடுகு வெந்தயம் உளுத்தம்பருப்பு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இரண்டு மூன்று ஆக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

  5. 5

    தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும். குழம்பு மசாலா மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். ஊற வைத்த புளிக்கரைசலை சேர்க்கவும்.

  6. 6

    இன்னும் சுவைக்காக ஒரே ஒரு தயார் செய்த உருண்டை மற்றும் குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உருண்டையை உடைத்து கலந்து விடவும். தேவைப்பட்டால் இப்பொழுது உப்பு சேர்க்கலாம். குழம்பு நன்கு கொதிக்க விடவும்.

  7. 7

    தயார் செய்ய இந்த உருண்டைகளை மெதுவாக சேர்த்து மிதமான தீயில் வைக்கவும். ஸ்பூன் வைத்து மெதுவாக திருப்பி விட்டு வேக வைக்கவும். அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து உடையாமல் கலந்து விடவும்.

  8. 8

    நறுக்கிய கொத்தமல்லி இலைகள் தூவி சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nisa
Nisa @Nisa3608
அன்று
I love cooking from my small age...I started to when I was 10...one of my aim was to become a chef but am on another line now...I came to know that there is a platform named Cookpad giving amazing opportunities to everyone who cook... without any hesitation I joined this platform...this is a beautiful place to share your talent...
மேலும் படிக்க

Similar Recipes