எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40,நிமிடங்கள்
  1. 1/4கிலோ மரவள்ளி கிழங்கு
  2. 1/2கப் பஜ்ஜி மாவு
  3. 1/2லிட்டர் எண்ணெய்
  4. 1வெங்காயம்
  5. 1/4டீஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  8. 1/4டீஸ்பூன் கடுகு
  9. 1/2டீஸ்பூன் கடலை பருப்பு
  10. ஒரு சிறிய துண்டு இஞ்சி
  11. மல்லி இலை
  12. கறிவேப்பிலை
  13. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

40,நிமிடங்கள்
  1. 1

    மரவள்ளி கிழங்கை வேக வைத்து தோல் உரித்து,பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை நறுக்கி வைக்கவும்.

  3. 3

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வதக்கி,பின்னர் வெங்காயம் கறிவேப்பிலை,மல்லி இலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  4. 4

    பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.மிளகாய் தூள் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    பின்னர் தயாராக வைத்துள்ள மரவள்ளி கிழங்கு நன்கு மசித்து சேர்த்து நன்கு வதக்கவும். ஐந்து நிமிடங்கள் ஆற வைக்கவும்.

  6. 6

    அந்த நேரத்தில் பஜ்ஜி மாவை எடுத்து ஒரு பௌலில் சேர்த்து,தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.

  7. 7

    பின்னர் மசாலாவை எடுத்து உருண்டைகளாக உருட்டி,கட்லட் போல் அழுத்தி கரைத்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் முக்கி,வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  8. 8

    பொறித்த பாஜ்ஜிகளை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும். இப்போது மிகவும் சுவையான சத்தான மரவள்ளி கிழங்கு பஜ்ஜி சுவைக்கத்தயார்.

  9. 9

    சுவையான சத்தான இந்த மரவள்ளி கிழங்கு பஜ்ஜி அல்லது போண்டாவை அனைவரும் செய்து சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes