பாசிப்பருப்பு குழம்பு, சௌசௌ கூட்டு / mongdal curry receip in tam

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

இந்த பாசிப்பருப்பு குழம்பு கேரளாவில் 'கட்டி பருப்பு குழம்பு' என்பர். ஆனால், நான் தக்காளி வெங்காயம் சேர்த்து, எனக்குப் பிடித்த ஸ்டைலில் அவர்களின் ரெசிபியை முயற்சி செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 பேர்
  1. 100கிராம் பாசிப்பருப்பு
  2. 10-12சின்ன வெங்காயம்
  3. 8பூண்டு பற்கள்
  4. 1ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1/2ஸ்பூன் பெருங்காயத்தூள்
  6. 5மிளகாய்
  7. கால்மூடி தேங்காய்
  8. 1ஸ்பூன் சீரகம்
  9. தாளிக்க:
  10. தேங்காய் எண்ணெய்
  11. கடுகு
  12. உளுந்து
  13. கருவேப்பிலை
  14. சௌசௌ கூட்டு:
  15. 1சௌசௌ
  16. 5சின்ன வெங்காயம்
  17. தாளிக்க: கடலெண்ணெய்
  18. கடுகு
  19. உளுந்து
  20. கறிவேப்பிலை
  21. வரமிளகாய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்,சீரகம், 2மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    அதில் ஒரு ஸ்பூன் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும் இதை கூட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

  2. 2

    1ஸ்பூன் கூட்டுக்கு எடுத்தது போக,மிக்ஸி ஜாரில் மீதி உள்ள தேங்காய் அரைத்த விழுதுடன் மீண்டும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    குக்கரில் பாசிப்பருப்பு சேர்த்து,2 நிமிடங்களுக்கு நன்றாக வறுக்கவும்.

  4. 4

    வறுத்த பாசிப்பருப்பை கழுவி, அதனுடன்
    வெங்காயம், பூண்டு 3மிளகாய்,மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு மூடி போட்டு 4 விசில் விடவும்.

  5. 5

    ஆவி அடங்கியதும், பாசிப்பருப்பை நன்றாக மசிக்கவும். பின்னர் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.

  6. 6

    இப்பொழுது உப்பு சேர்க்கவும்.இந்த கலவையை மீடியம் தீயில் நன்றாக கொதிக்க விட்டு வேறு ஃபௌவுலுக்கு மாற்றவும்.

  7. 7

    வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து குழம்பில் சேர்க்கவும்.

  8. 8

    இது கெட்டியாக வைத்து 'கெட்டி பருப்பு குழம்பு"என்று கூறுவர்.

    நமக்கு பிடித்தவாறு தண்ணீரின் அளவைக் கூட்டிக் குறைத்து கெட்டியாகவோ அல்லது தண்ணியாகவோ வைத்துக்கொள்ளலாம்.

    அவ்வளவுதான். சுவையான பாசிப்பருப்பு குழம்பு அதாவது 'கட்டி பருப்பு குழம்பு'ரெடி.

  9. 9

    சௌசௌ கூட்டு:

    சௌசௌவை தோல் உரித்து,கழுவி தேவையான வடிவத்திற்கு வெட்டி வைத்துக் கொள்ளவும்.

  10. 10

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை,உளுந்து, வரமிளகாய் சேர்த்து தாளித்து நறுக்கி வைத்த சௌசௌ சேர்க்கவும்.

  11. 11

    சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். 200ml தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் நன்றாக வேகவிடவும்.

  12. 12

    10 நிமிடத்தில் வெந்துவிடும். தண்ணீர் எல்லாம் வற்றிய பிறகு, (நாம் குழம்பிற்கு அரைத்த) தேங்காய், சீரக,மிளகாய் விழுதை கூட்டில் சேர்க்கவும்.

  13. 13

    நன்றாக கிளறி இன்னும் 2நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் வேறொரு பவுலுக்கு மாற்றவும்.

  14. 14

    சுவையான சௌசௌ கூட்டு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes