பாசிப்பருப்பு சாம்பார்(PASIPARUPPU SAMBAR RECIPE IN TAMIL)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

பாசிப்பருப்பு சாம்பார்(PASIPARUPPU SAMBAR RECIPE IN TAMIL)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
5 பேர்
  1. 100கிராம் பாசிப்பருப்பு
  2. 15சின்ன வெங்காயம்
  3. 1முழு பூண்டு
  4. 2தக்காளி
  5. 1மிளகாய்
  6. 3ஸ்பூன் சாம்பார் தூள்
  7. 1/2ஸ்பூன் மல்லித் தூள்
  8. 1/2ஸ்பூன் பெருங்காயத்தூள்
  9. 1/2ஸ்பூன் சீரகம்
  10. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 2ஸ்பூன் தேங்காய் துருவல்
  12. தேவையானஅளவு உப்பு
  13. தாளிக்க
  14. கடுகு
  15. உளுந்து
  16. சின்ன வெங்காயம்
  17. கறிவேப்பிலை
  18. கடலை எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில்,நன்றாக கழுவிய பாசிப்பருப்புடன் சின்ன வெங்காயம்,மிளகாய் பூண்டு,தக்காளி,மஞ்சள் தூள்,பெருங்காயத் தூள் மற்றும் சீரகம் சேர்த்து 500ml தண்ணீர் ஊற்றி, 1ஸ்பூன் கடலை எண்ணெய் விட்டு 4 விசில் விட்டு இறக்கவும்.

  2. 2

    குக்கரில் ஆவி அடங்கியதும் பருப்பை நன்றாக கடைந்து கொண்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஸ்டவ்வில் வைத்துக் கொதிக்க விடவும்.

  3. 3

    நன்றாக கொதித்ததும், சாம்பார் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிடவும்.உப்பு சேர்க்கவும்.

  4. 4

    பின்,மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவலை, பல்ஸ் மோடில் ஒருமுறை சுற்றி சாம்பாரில் சேர்த்து ஒரு கொதிவிட்டு மல்லித் தழை தூவி இறக்கவும்.

  5. 5

    கடைசியாக,அடுப்பில் வாணலியை வைத்து கடலை எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து கருவேப்பிலை நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.

  6. 6

    அவ்வளவுதான் சுவையான பாசிப்பருப்பு சாம்பார் ரெடி.

    இது இட்லி,தோசைக்கு மிக சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes