KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010

#magazine1
ஹோட்டல் ஸ்டைல் செய்து கேஎஃப்சி சிக்கன் மிகவும் அருமையாக இருக்கும்.

KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil

#magazine1
ஹோட்டல் ஸ்டைல் செய்து கேஎஃப்சி சிக்கன் மிகவும் அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

11/2மணி நேரம்
5 பேர்
  1. 1/2 கிலோ சிக்கன்
  2. 2 முட்டை
  3. 1/2 கப் தயிர்
  4. ஒரு கப் மைதா மாவு
  5. அரைக்கப் கான்பிளவர் மாவு
  6. தேவையான அளவுஇஞ்சி பூண்டு விழுது அரைக்க
  7. சிறிய துண்டு இஞ்சி, 4வெங்காயம், 10 பூண்டு பல்
  8. 4 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  9. 3 மிளகாய்த்தூள்
  10. 2 ஸ்பூன் மிளகுத் தூள்
  11. 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  12. 1/2 ஸ்பூன் சீரக தூள்
  13. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

11/2மணி நேரம்
  1. 1

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து எலும்பு இல்லாமல் கழுவி எடுத்துக் கொண்டு ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம் போட்டு

  2. 2

    சிறிய துண்டு இஞ்சி, 10 பூண்டு பல், சேர்த்து விழுதாக அரைக்கவும்.

  3. 3

    அந்தச் சிக்கனில் அரை கப் தயிர், இரண்டு முட்டை, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்,

  4. 4

    அரை ஸ்பூன் மிளகு தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசறி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

  5. 5

    மற்றொரு பவுலில் ஒரு கப் மைதா மாவு, அரை கப் கார்ன்ஃப்ளார் மாவு, ஒரு ஸ்பூன் மிளகு தூள், அரை ஸ்பூன் மிளகாய்த்தூள்,

  6. 6

    அரை ஸ்பூன் கரம் மசாலா, அரை ஸ்பூன் சீரகத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

  7. 7

    கிளறி வைத்த கலவையோடு ஊற வைத்த சிக்கனை ஒவ்வொன்றாக பிரட்டி ஒரு15 நிமிடம் ஊற வைத்து,

  8. 8

    மீண்டும் அதே ஊரவைத்த சிக்கனில் ஒரு பிரட்டு பிரட்டி மீண்டும் அந்த கலவையோடு முன்புறம் பின்புறமாக கிளறி எடுத்துக் கொள்ளவும்.

  9. 9

    பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும் காய்ந்தபின் மிதமான சூட்டில் ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும்

  10. 10

    சுவையான ருசியான கேஎஃப்சி சிக்கன் ரெடி.🍗🍗

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes