ஆனியன் உளுந்து வடை / Ulunthu Vadai Recipe in tamil

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#magazine1 (80 வது ரெசிபி)
உளுந்து வடைக்கு சிறிது பச்சரிசியும் ஊற வைத்து செய்தால் வடை மொறுமொறுப்பாகவும் ஸாப்ட்டாகவும் வரும்.ஆன் தி ஸ்பாட் செய்த வடை. ஈவ்னிங் சுடசுட சாப்பிட ஆப்ட்டானது.வெங்காயம் எந்த அளவு போடுகின்றோமோ அந்த அளவிற்கு வடை சூப்பராக இருக்கும்.

ஆனியன் உளுந்து வடை / Ulunthu Vadai Recipe in tamil

#magazine1 (80 வது ரெசிபி)
உளுந்து வடைக்கு சிறிது பச்சரிசியும் ஊற வைத்து செய்தால் வடை மொறுமொறுப்பாகவும் ஸாப்ட்டாகவும் வரும்.ஆன் தி ஸ்பாட் செய்த வடை. ஈவ்னிங் சுடசுட சாப்பிட ஆப்ட்டானது.வெங்காயம் எந்த அளவு போடுகின்றோமோ அந்த அளவிற்கு வடை சூப்பராக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
6பேர்
  1. 1 கப்முழு உளுந்து
  2. 2 டேபிள்ஸ்பூன்பச்சரிசி
  3. 1கப்பொடியாக நறுக்கிய வெங்காயம்
  4. தேவையான அளவுபொடி உப்பு ருசிக்கு
  5. 1ஆர்க்குகறிவேப்பிலை
  6. 2டேபிள் ஸ்பூன்கொத்தமல்லி தழை
  7. தேவையான அளவுதண்ணீர்
  8. தேவையான அளவுஎண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    .உளுந்துடன் பச்சரிசி சேர்த்து 2 மணி நேரம் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.கிரைண்டரில் உளுந்தை போடவும்.

  2. 2

    தண்ணீரை தெளித்து,தெளித்து, உப்பு சேர்த்து பந்து போல் உளுந்தை மைய அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.பிறகு மாவில் நறுக்கின வெங்காயம்,கறிவேப்பிலை,கொத்தமல்லி போடவும்.பின்பு நன்கு கலந்து கொள்ளவும்.

  4. 4

    பிளாஸ்டிக் பேப்பரில் மாவை தட்டி நடுவில் ஓட்டை போட்டுக் கொள்ளவும்.எண்ணெய் நன்கு காய்ந்ததும்,அடுப்பை சிறியதில் வைத்து வடையை ஒவ்வொன்றாக போடவும்.ஒருபக்கம் வெந்ததும் திருப்பி போட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும்.

  5. 5

    இப்போது சுடசுட,*ஆனியன் உளுந்து வடை* தயார்.இதற்கு,சாஸ்,சட்னி,சாம்பார்,தயிர் ஆகியவை மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.செய்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes