சுண்டைக்காய் காரக் குழம்பு / Sundakai puli kulambu Recipe in tamil

manu
manu @nidhu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
நான்கு பேர்
  1. 200 கிராம்சுண்டைக்காய்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 3தக்காளி
  4. 100 கிராம்பூண்டு
  5. 100mlநல்லெண்ணெய்
  6. தேவையான அளவுகடுகு வெந்தயம் - தாளிக்க
  7. ஒரு கொத்துகறிவேப்பிலை
  8. சிறிதளவுவடகம் - தாளிக்க
  9. எலுமிச்சம்பழம் அளவுபுளி
  10. கால் கப்தேங்காய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    சுண்டைக்காயை லேசாக நசுக்கி தண்ணீரில் சேர்க்கவும். வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு தோல் உரித்து கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, வெந்தயம், வடகம், கருவேப்பிலை தாளிக்கவும். பின்னர் வெங்காயம் தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் தக்காளி நன்கு வதங்கிய பின்னர் சுண்டைக்காயை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின்னர் 2 ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் கரைத்து வைத்த புளி தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.

  4. 4

    10 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். பின்னர் அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும்.

  5. 5

    பாரம்பரிய சுண்டைக்காய் கார குழம்பு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

manu
manu @nidhu
அன்று

Similar Recipes