சப்பாத்தி-கருப்பு சுண்டல் கிரேவி

இந்த கிரேவி பிளைனாகவோ அல்லது கருப்பு சுண்டல் அல்லது பட்டாணி உருளைக்கிழங்கு அல்லது விரும்பிய காய்கறிகள் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
இந்த கிரேவியில், மல்லி,புதினா இலைகள் மற்றும் கல் பாசி முக்கிய பங்கு வகிப்பதால் கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.
சப்பாத்தி-கருப்பு சுண்டல் கிரேவி
இந்த கிரேவி பிளைனாகவோ அல்லது கருப்பு சுண்டல் அல்லது பட்டாணி உருளைக்கிழங்கு அல்லது விரும்பிய காய்கறிகள் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
இந்த கிரேவியில், மல்லி,புதினா இலைகள் மற்றும் கல் பாசி முக்கிய பங்கு வகிப்பதால் கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.
சமையல் குறிப்புகள்
- 1
கருப்புக் சுண்டலை குறைந்தது 8 மணி நேரம் ஊற வைத்து எடுக்கவும்.
அல்லது
ஒரு பாத்திரத்தில் நன்றாக தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் சுண்டலை 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அரைத்துக்கொள்ளவும்.
தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளவும்.
- 3
ஸ்டவ்வில், குக்கரை வைத்து,அதில்
2ஸ்பூன் எண்ணெய் விட்டு,1பட்டை,1கிராம்பு, 1பிரியாணி இலை,1/4ஸ்பூன் கல்பாசி சேர்த்து வதங்கியதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். - 4
பின்னர்,தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 5
பின்,மல்லித்தூள்,கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,உப்பு சேர்க்கவும்.
- 6
பின்னர் ஊறவைத்த சுண்டல் சேர்த்து கிளறவும்.
- 7
நன்றாக கிளறி, இதனுடன் 2டம்ளர்(தேவைக்கேற்ப)தண்ணீர் சேர்க்கவும். கொதிக்கவிடவும். கொதித்ததும், தேங்காய் அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து,மூடி போட்டு 6 விசில் விடவும்.
- 8
ஆவி அடங்கியதும், திறந்து கிரேவி பதம் சரிபார்க்கவும். இன்னும், கெட்டியாக வேண்டுமென்றால், 5நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு இறக்கி,மல்லி இலை தூவி,வேறு ஃபௌவுலுக்கு மாற்றவும்.
- 9
அவ்வளவுதான். சுவையான கருப்பு சுண்டல் கிரேவி ரெடி.
இந்த கிரேவியில், கருப்பு சுண்டலுக்கு பதிலாக உருளைக்கிழங்கு மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்தும் செய்யலாம்.
அல்லது
நமக்கு பிடித்த காய்கறிகளை சேர்த்தும் வெஜிடபிள் கிரேவி ஆக செய்யலாம். - 10
சப்பாத்திக்கு, 2 கப் மாவெடுத்து அதில், 1ஸ்பூன் வெண்ணெய் மற்றும் 1ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசையவும்.
- 11
நன்றாக 10 நிமிடங்களுக்கு, கைகளால் நன்கு பிசையவும்.
- 12
பிசைந்த மாவின் மேல்,1ஸ்பூன் எண்ணெய் தடவி,குறைந்தது, அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் சிறு,சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தியாக விரித்து விட வேண்டும்.
- 13
இனி,கல் சூடானதும் சப்பாத்தியை போட்டு,ஒரு புறம் வெந்தது,மறு புறம்பாக வைத்து எடுக்க வேண்டும்.
- 14
சுவையான சப்பாத்தி மற்றும் கருப்பு சுண்டல் கிரேவி ரெடி.
Similar Recipes
-
-
உருளைக்கிழங்கு கருப்பு உளுந்து குருமா (Urulai Karuppu ulunthu Kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
சுண்டல் குழம்பு
அரைத்த மசாலாவில் செய்த சுவையான கருப்பு சுண்டல் குழம்பு.. நிறைய புரோட்டின் சத்து நிறைந்தது கருப்பு சுண்டல். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
காய்கறி மல்லி புதினா புலாவ் (Kaaikari Malli pudina Pulav Recipe in tamil)
#Everyday2மதிய உணவிற்கு ஏற்ற இந்த பச்சை புலாவ் மிகவும் சத்தான தாகும். இதில் அதிகப்படியான மல்லி இலைகள் மற்றும் புதினா இலைகள் சேர்க்கப்பட்டுள்ளன கூடவே காய்கறிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பிட்டுள்ள காய்கறிகளை தவிர உருளைக்கிழங்கு, காலிபிளவர், பட்டாணி போன்றவையும் சேர்க்கலாம். வெயில் காலத்தில் மிகவும் மலிவாக கிடைக்கும் மல்லி புதினா இலைகளை வைத்து ஆரோக்கியமான இந்தப் புலாவை செய்து சாப்பிடலாம். பச்சை இலைகள் சாப்பிடுவதனால் உடம்பில் ரத்தம் அதிகரிக்கும். நீங்களும் இதை செய்து ரசித்துப் பாருங்கள். Asma Parveen -
கருப்பு உளுந்து பட்டர் மசாலா (Karuppu ulunthu butter masala recipe in tamil)
#Veகருப்பு உளுந்து மிகவும் சத்தான தாகும். இதனை உபயோகித்து அருமையான கிரேவி ரெஸிபி இன்று பகிர்ந்துள்ளேன். இந்த ரெசிபிக்கு முழு கருப்பு உளுந்து உபயோகிப்பது நல்லது. Asma Parveen -
புதினா சாதம் (Pudhina Rice) (Puthina satham recipe in tamil)
#varietyசுவையான மற்றும் சத்தான புதினா சாதம்.. Kanaga Hema😊 -
கரம் மசாலா தூள்😋(garam masala powder recipe in tamil)
கறி குழம்பு செய்யும் போது இந்த மசாலா சேர்த்து செய்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.#2#misparani Mispa Rani -
-
கருப்பு சுண்டல் சாதம் (Karuppu sundal satham recipe in tamil)
சுண்டலில் சத்துகள் அதிகம்#myownrecipe Sarvesh Sakashra -
காய்கறி இல்லாத குருமா(no vegetable kurma recipe in tamil)
#qkவீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில்,எளிமையாக சுவையாக இந்த குருமா செய்து இட்லி,தோசை,சப்பாத்தி இவற்றிற்கு செய்து கொள்ளலாம். Ananthi @ Crazy Cookie -
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (Urulai kilangu pattani kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
காளான் பன்னீர் பட்டாணி பிரியாணி (Mushroom paneer peas biryani recipe in tamil)
காளானுடன் பன்னீர் மற்றும் பட்டாணி போடுவதால் மிகவும் சுவையாக இருக்கும். பிரியாணி சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
-
தாபா ஸ்டைல் கருப்பு கடலை மசாலா கறி(dhaba style channa masala recipe in tamil)
#TheChefStory #ATW3புரோட்டீன் மிகுந்த,இந்த கருப்பு கடலை மசாலா கறி,மிகவும் சுவையாகவும்,நன்றாக 'திக்'-காகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
உருளைக்கிழங்கு பாசிபயிறு குழம்பு (Urulai paasi parupu Kulambu Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
-
முளைக்கட்டிய கருப்பு சுண்டல் தோசை (Mulai kattiya karuppu sundal dosai recipe in tamil)
#JAN1வெறும் சுண்டல் தாளித்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் தோசையாக ஊற்றி காரமான சட்னியுடன் சேர்த்து பரிமாறும் போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Sangaraeswari Sangaran -
-
🥣🥣ஈரோடு மசாலா சுண்டல்🥣🥣 (Erode masala sundal recipe in tamil)
மசாலா சுண்டல் புரோட்டீன் நிறைந்தது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் பெரியவர்களுக்கு உடல் நலத்திற்கு அடிக்கடி சாப்பிட வேண்டிய பொருள். #GA4 #week6 Rajarajeswari Kaarthi -
மசாலா சுண்டல்(masala sundal recipe in tamil)
இந்த சுண்டல் மாலை நேரத்தில் காஃபி, டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சத்தானது. punitha ravikumar -
கருப்பு பீன்ஸ் மாப்பிள்ளை சம்பா அவுல்
கருப்பு பீன்ஸ் சுண்டல் செய்தேன். மீதம் ஆகி விட்டது. இதனால் 2 நிமிடத்தில் சம்பா அவுல் செய்தேன். #leftover Sundari Mani
More Recipes
கமெண்ட்