தலைப்பு: முருங்கைக்காய் அல்வா

Nasira kasim
Nasira kasim @cook_30669032

இந்த ரெசிபி @Mom's city corner
யூட்யூப் சேனலில் உள்ளது

தலைப்பு: முருங்கைக்காய் அல்வா

இந்த ரெசிபி @Mom's city corner
யூட்யூப் சேனலில் உள்ளது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பேர்
  1. 2முருங்கைக்காய்
  2. 50 கிராம்பாதாம்,முந்திரி
  3. 250 மில்லிபால்
  4. 300 கிராம்வெல்லம்
  5. 100 கிராம்நெய்
  6. 2ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முருங்கைக்காயை ஆவியில் வேக வைத்துக்கொள்ளவும்...வேகவைத்த முருங்கைக்காயை விதை நீக்கி சதைப்பகுதியை மட்டும் மையாக அரைத்துக்கொள்ளவும்

  2. 2

    பாதாம்,முந்திரி இரண்டையும் வெந்நீரில் ஊறவைத்து பாதாமில் தோல் நீக்கி இரண்டையும் சிறிதளவு பால் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும்...

  3. 3

    வெல்லத்தை இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி அதில் ஏலக்காயை இடித்து சேர்த்து வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி எடுத்து வைக்கவும்...

  4. 4

    அடுப்பில் அடி கனமான பாத்திரம் வைத்து சூடானவுடன் சிறிதளவு நெய் சேர்த்து அதில் சிறிதளவு முந்திரியை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்...
    அடுத்தபடியாக முருங்கைக்காய் விழுதை பாத்திரத்தில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்...
    பிறகு வெல்லப்பாகு இனிப்பு சுவைக்கு ஏற்றவாறு சேர்த்து கிளறவும்,
    அடுத்ததாக பாதாம், முந்திரி விழுதை சேர்த்து அது வேகும் வரை கிளறவும்..

  5. 5

    பிறகு அதில் பால் சேர்த்து அடிபிடிக்காமல் அல்வா பதம் வரும் வரை நன்றாக கிளறவும்...
    பின்னர் சிறிது சிறிதாக நெய் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறி வறுத்த முந்திரி சேர்த்து இறக்கி அலங்கரித்து சூடாக பரிமாறவும்...
    சுவையான மிகவும் ஆரோக்கியமான முருங்கைக்காய் அல்வா இப்போது தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nasira kasim
Nasira kasim @cook_30669032
அன்று

கமெண்ட் (4)

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
mam one doubt வெல்லம் கரையவும் வடித்து எடுத்துக் கொண்டதை எப்போது சேர்ப்பது ?

Similar Recipes