சாமை அல்வா (Saamai halwa recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

சாமை அல்வா (Saamai halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் சாமை
  2. 1/2 கப் டெசிகேடட் தேங்காய் பவுடர்
  3. 8ஏலக்காய்
  4. 4 கப் (1 லிட்டர்) பால்
  5. 100 கிராம் நெய்
  6. 25 முந்திரி
  7. 2 டேபிள்ஸ்பூன் பாதாம் நறுக்கியது
  8. 10 திராட்சை
  9. 1_1/2 கப் அச்சு வெல்லம்
  10. 1 சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    சாமை அரிசி ஐ அலசி பின் தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் வரை ஊறவிடவும் பின் வடிகட்டி துணியில் உலர்த்தி விடவும்

  2. 2

    பின் வாணலியில் 25 மில்லி நெய் விட்டு சூடானதும் சாமை அரிசி ஐ சேர்த்து நன்கு வறுக்கவும் பின் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு பொடிக்கவும் மணல் மணலாக பருவட்டையா இருக்க வேண்டும்

  3. 3

    பின் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை வறுத்து தனியே எடுத்து வைக்கவும், அதில் 10 முந்திரி ஐ தனியே எடுத்து வைத்துட்டு மீதியை கரகரப்பாக பொடித்து கொள்ளவும் பாதாமை வறுத்து எடுத்து தனியே வைக்கவும்

  4. 4

    பின் மீண்டும் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் அரைத்த சாமை ஐ சேர்த்து நன்கு வதக்கவும் பின் காய்ச்சிய பால் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கிளறி விடவும் பின் மூடி வைக்கவும் அவ்வப்போது திறந்து கிளறி விடவும்

  5. 5

    சாமை நன்கு வெந்து பால் முழுவதும் சுண்டியதும் தேங்காய் பவுடர் சேர்த்து நன்கு கிளறவும் பின் பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும்

  6. 6

    பின் வெல்லம் கரைந்து இளகி பின் சேர்ந்து வரும் போது ஏலத்தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறவும் பின் கரகரப்பாக பொடித்த முந்திரி சேர்த்து நன்கு கிளறவும்

  7. 7

    பின் 50 மில்லி நெய் ஐ சூடா ஊற்றி நன்கு கிளறவும் பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் வரை கிளறவும் பின் அடுப்பை அணைத்து விடவும்

  8. 8

    பின் இதை இன்னும் கொஞ்சம் ருசியை அதிகரிக்க தம் போடவும் இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி மேலே மீதமுள்ள நெய்யை ஊற்றி வறுத்த முந்திரி திராட்சை பாதாம் ஐ பரவலாக தூவி அலுமினிய பாயிலை கொண்டு மூடி சூடாக்கிய ஓவனில் 8 நிமிடம் வரை வைத்து எடுக்கவும் (அதிகம் வைக்க வேண்டாம்)மேல் பகுதி நன்கு சிவந்து ருசி நன்றாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes