தேவையான பொருட்கள்

30 நிமிடம்
நான்கு பேர்
  1. 400 கிராம்மஸ்ரூம்
  2. 4வெங்காயம் பெரியது
  3. 2தக்காளி பெரியது
  4. ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  5. 4முந்திரிப்பருப்பு
  6. பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தாளிக்க
  7. அரை ஸ்பூன்பெருஞ்சீரகம்
  8. ஒரு ஸ்பூன்மசாலா தூள்
  9. இரண்டு ஸ்பூன்மிளகாய் தூள்
  10. அரை கப்கெட்டியான பால்
  11. ஒரு டேபிள்ஸ்பூன்வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் வெங்காயம், தக்காளி, பெருஞ்சீரகம்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் ஒரு தட்டில் எடுத்து ஆறவிடவும்.

  2. 2

    மஷ்ரூமை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

  3. 3

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் அதனுடன் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

  4. 4

    மசாலாத் தூள்கள் நிறம் மாறிய உடன் மஷ்ரூம் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கவும். அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி வேக விடவும். பின்னர் வதக்கி ஆற வைத்துள்ளவற்றை 4 முந்திரிப்பருப்பு சேர்த்து நன்கு அரைத்து மஸ்ரூம் உடன் சேர்க்கவும் ‌.

  5. 5

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். பின்னர் அரை கப் பால் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும். ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து இறக்கவும்..

  6. 6

    வெஸ்டர்ன் ஸ்டைல் மஸ்ரூம் கிரேவி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

manu
manu @nidhu
அன்று

Similar Recipes