சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி

Shanthi
Shanthi @Shanthi007

#veg இது என் செய்முறை. நன்றாக உள்ளது. சட்னி ஹோட்டல் சுவையில் இருக்கும். பணியாரத்துடன் சாப்பிடால் மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 5 ஸ்பூன் 🥄சத்து மாவு
  2. 1/2 கிலோஇட்லி மாவு
  3. 1 ஸ்பூன்கடலைப்பருப்பு
  4. 4 ஸ்பூன் 🥄தேங்காய் துருவல்
  5. 10 நம்பர்சின்ன வெங்காயம்
  6. 2 நம்பர்பச்சை மிளகாய்
  7. 1 ஸ்பூன்கடுகு, உளுத்தம்பருப்பு,பெருங்காயம், கறிவேப்பிலை
  8. தேவையான அளவுந.எண்ணெய்
  9. தேவையான அளவுஉப்பு
  10. 50 கிராம்சட்னி செய்ய தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு
  11. 1 நம்பர்வெங்காயம்
  12. 2 நம்பர்தக்காளி 🍅
  13. சிறிது அளவுபுளி
  14. 3 நம்பர்மிளகாய் வற்றல்
  15. 2 ஸ்பூன்தேங்காய் துருவல்
  16. தேவையான அளவுஉப்பு
  17. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    இட்லி மாவு உடன் சத்து மாவு வை கலந்து சிறிது நேரம் வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். மாவுடன் கலந்து குழி பணியார சட்டியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை ஊற்றி மூடி வைத்து வெந்த பின்பு எடுக்கவும்.

  2. 2

    நல்லா பஞ்சு போல் இருக்கும்.

  3. 3

    சுவையான ஆரோக்கியமான சத்து மாவு பணியாரம் ரெடி

  4. 4

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு சேர்த்து வறுத்து எடுக்கவும்.வெங்காயம், தக்காளி 🍅 சேர்த்து பெருங்காயம், புளிசேர்த்து நன்றாக வதக்கவும்.

  5. 5

    ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.சுவையான கடலைப்பருப்பு சட்னி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes