தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. கேரட் 🥕 சாதம் செய்ய:
  2. 1/2 கப் சாதம்
  3. 2 கேரட் துருவியது
  4. 1 பெரிய வெங்காயம்
  5. 3 பச்சைமிளகாய்
  6. 3 ஸ்பூன் எண்ணெய்
  7. 1/2 ஸ்பூன் நெய்
  8. 1/2 ஸ்பூன் கடுகு
  9. 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  10. தேவையான அளவுஉப்பு
  11. பட்டர் ஆனியன் ரைஸ் (ஒயிட் சாதம்) செய்ய:
  12. 1/2 கப் உதிராக வடித்த சாதம்
  13. 3 டேபிள்ஸ்பூன் வெண்ணெய்
  14. 1 ஸ்பூன் கடுகு
  15. 25 சின்ன வெங்காயம்
  16. 3 வரமிளகாய்
  17. தேவையான அளவுஉப்பு
  18. முருங்கை கீரை சாதம் செய்ய:
  19. 1 கப் உதிராக வடித்த சாதம்
  20. 2 கைப்பிடி அளவு முருங்கை கீரை
  21. 20 சின்ன வெங்காயம்
  22. 15 பல் பூண்டு
  23. 4 வரமிளகாய்
  24. 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
  25. 2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  26. 1 ஸ்பூன் தனியா
  27. 1 ஸ்பூன் சீரகம்
  28. 1 ஸ்பூன் மிளகு
  29. 1 ஸ்பூன் சோம்பு
  30. 2 சிட்டிகை பெருங்காயத்தூள்
  31. சிறிதுபுளி
  32. 1 பெரிய வெங்காயம்
  33. 1 ஸ்பூன் கடுகு
  34. தேவையான அளவுஉப்பு
  35. 50 மில்லி நல்லெண்ணெய்
  36. அலங்கரிக்க:
  37. சிறிதுமாதுளை முத்துக்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    கேரட் சாதம் செய்ய: கேரட்டை கழுவி துருவி கொள்ளவும் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  2. 2

    பின் துருவிய கேரட் சேர்த்து நன்கு வதக்கவும் இரண்டு நிமிடம் கழித்து வடித்த சாதம் மற்றும் உப்பு கரம் மசாலா தூள் நெய் சேர்த்து நன்கு கிளறவும்

  3. 3

    சுவையான ஆரோக்கியமான கேரட் சாதம் ரெடி

  4. 4

    பட்டர் ஆனியன் ரைஸ் (ஒயிட் சாதம்) செய்ய: வாணலியில் வெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் வரமிளகாய் சேர்த்து வதக்கவும் பின் வடித்த சாதம் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

  5. 5

    சுவையான ஆரோக்கியமான பட்டர் ஆனியன் ரைஸ் ஒயிட் சாதம் ரெடி

  6. 6

    முருங்கை கீரை சாதம் செய்ய: கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சீரகம் தனியா மிளகு சோம்பு வரமிளகாய் ஆகியவற்றை வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து எடுத்து ஆறவிடவும்

  7. 7

    பின் மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும் பின் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் பூண்டை வதக்கி பொடித்த பொடியுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்

  8. 8

    பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு முருங்கை கீரை சேர்த்து வதக்கவும் பின் அதை மிக்ஸியில் போட்டு கூட புளி பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்

  9. 9

    இந்த பதத்தில் அரைக்கவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்

  10. 10

    பின் வடித்த சாதம் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறவும் சுவையான ஆரோக்கியமான முருங்கை கீரை சாதம் ரெடி

  11. 11

    வாழை இலையில இந்தியாவின் வரைபடத்தை வரைந்து கட்செய்து கொள்ளவும்
    பின் அடியில் (உணவு பொருள் என்பதால்) ஒரு ப்ளேட் அல்லது இலையை வைக்கவும்
    முதலில் மேல் பகுதியில் கேரட் 🥕 சாதத்தை பரப்பவும்
    பின் நடுவில் ரெடியாக உள்ள பட்டர் ஆனியன் சாதத்தை பரப்பவும்

  12. 12

    பின் அடிப்பகுதியில் ரெடியாக உள்ள முருங்கை கீரை சாதத்தை பரப்பவும்

  13. 13

    பின் இறுதியாக இந்தியா வரைபடத்தை மாதுளை முத்துக்கள் கொண்டு அலங்கரிக்கவும்

  14. 14

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes