எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 மணி
2 பேர்
  1. 2கப் மைதா மாவு
  2. 1ஸ்பூன் சீனி
  3. 1/2ஸ்பூன் பேகிங் சோடா
  4. 1/2கப் தயிர்
  5. 1ஸ்பூன் ஆயில்
  6. தேவைக்குஉப்பு
  7. தேவையான அளவு வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

3 மணி
  1. 1

    மைதா மாவுடன் மேற்கூறிய (வெண்ணெய் தவிர்த்து)அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

  2. 2

    தண்ணீர் அதிகமாக சேர்க்க கூடாது.நன்றாக இழுத்து பிசைய வேண்டும்.10-15 நிமிடங்களுக்கு பிசையவும்.

  3. 3

    பிசையும் பொழுது,மாவு கையில் ஒட்டதான் செய்யும். அதற்காக,கூடுதல் மாவு சேர்க்க வேண்டாம்.பிசைய, பிசையத்தான் ஒட்டாமல் வரும்.

  4. 4

    மாவின் மேல் சிறிதளவு வெண்ணெய் தடவி,குறைந்தது 2மணி நேரம் ஊற விடவும். ஊறியதும், மாவு இலேசாக இருக்கும். எனவே, முதலில் அதிகமாக தண்ணீர் சேர்த்தால்,ஊறிய பிறகு பதம் சரியாக இருக்காது.

  5. 5

    ஊறிய மாவை இன்னும் சில நிமிடங்களுக்கு பிசைந்து, பின் உருண்டைகளாக பிடிக்கவும்.

  6. 6

    பிடித்த உருண்டைகளை மாவில் பிரட்டி, நீள வாக்கில் அல்லது வட்டமாக விரித்து விட வேண்டும்.

  7. 7

    விரித்து விட்ட வடிவத்தில் ஒருபக்கம் தண்ணீர் தொட்டு தடவ வேண்டும்.

  8. 8

    பின், தவாவில் போட்டு அடி ப‌க்க‌ம் (தண்ணீர் பக்கம்)வெந்ததும், தவாவை திருப்பி மேல் பக்கத்தை தீயில் காட்டி அல்லது நேரடியாக தீயில் காட்டவும்.

  9. 9

    அடிப்பக்க மாவு தவாவில் ஒட்டவில்லையெனில், எப்பொழுதும் போல் மாற்றி போட்டு வேக விடவும்.வெந்ததும் அத‌ன் மேல் பட்டர் சேர்க்க வேண்டும். சூடாக இருக்கும் போதே சேர்த்தால் தான் சுவை கூடுதலாக இருக்கும்.

  10. 10

    அவ்வளவுதான். சுவையான பட்டர் நான் ரெடி.

    இதற்கு அசைவ வகை கிரேவி வகைகள் மிக பொருத்தமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes