கார்லிக் பட்டர் நான்(garlic butter naan recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

ஈஸ்ட் சேர்க்காமல் செய்தது. மிகவும் அருமையாக வந்தது.

கார்லிக் பட்டர் நான்(garlic butter naan recipe in tamil)

ஈஸ்ட் சேர்க்காமல் செய்தது. மிகவும் அருமையாக வந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நபர்கள்
  1. 2 கப் மைதா
  2. 2டீஸ்பூன் பேக்கிங் பௌடர்
  3. 1டீஸ்பூன் பேக்கிங் சோடா
  4. 1/2 கப் தயிர்
  5. 1+1/2 டீஸ்பூன் உப்பு
  6. 1டீஸ்பூன் சர்க்கரை
  7. 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  8. சுடுவதற்கு :
  9. 2டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த பூண்டு
  10. பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
  11. 2டேபிள் ஸ்பூன் உருக்கிய வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மைதா, உப்பு, சர்க்கரை, பேக்கிங் சோடா, பேக்கிங் பௌடர், எண்ணெய், தயிர் சேர்த்து நன்கு கலந்து பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சஃப்டாக நன்கு பிசைந்து லேசாக எண்ணெய் தடவி மூடி குறைந்த பட்சம் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    சற்று உப்பி சஃப்டாக இருக்கும். இதை சற்று பிசைந்து தேவையான அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பிறகு தேய்க்கும் கல்லில் மைதாவை தூவி உருண்டையை வைத்து லேசாகத் தட்டி இதன் மேல் சிறிது பூண்டு தூள், கொத்தமல்லித்தழை வைத்து அழுத்தி அதன்மேல் லேசாக மைதாவை தூவி சப்பாத்தி போல் தேய்த்து வைக்கவும்

  3. 3

    அடுப்பில் நான் ஸ்டிக் பேன் அல்லது தோசைக் கல்லை வைத்து சூடானதும் தேய்த்த சப்பாத்தி மேல் தண்ணீர் லேசாகத் தெளித்து சூடான தோசைக்கல்லில் போட்டு பபுள்ஸ் வந்ததும் தோசைக்கல்லைத் திருப்பி தணலில் காட்டி பின்னர் தோசைக்கல்லைத் திருப்பி வெந்த நானை எடுத்து தட்டில் வைத்து மேலே உருக்கிய வெண்ணெயைத் தடவி வைக்கவும். சூப்பர் சாஃப்டான கார்லிக் பட்டர் நான் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes