மணமணக்கும் மட்டன் வெள்ளை பிரியாணி(FlavourfulMuttonWhiteBiriyani)

#magazine4
வித்தியாசமான முறையில், செய்யப்பட்ட மட்டன் வெள்ளை பிரியாணி.. அருமையான மணமும் ருசியும் கொண்டது..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டனை சுத்தம் செய்து வைக்கவும். 2 கப் பாஸ்மதி அரிசியை நன்றாக சுத்தம் செய்து, 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 2
3 டேபிள்ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, 3 டேபிள்ஸ்பூன் பச்சைமிளகாய் விழுது, 3 டேபிள்ஸ்பூன் தயிர், பொடியாக நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலை, அரை எலுமிச்சை பழம், தேவையான அளவு உப்பு ஆகியவை மட்டனில் சேர்த்து நன்றாக பிசைந்து 30 நிமிடங்கள் கண்டிப்பாக ஊற வைக்கவும்.
- 3
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, சீரகம் சேர்த்து பொரிந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி, மசாலாவுடன் ஊறவைத்த மட்டனை சேர்த்து நன்றாக தண்ணீர் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- 4
தேவைப்பட்டால் அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து 20 நிமிடங்களுக்கு விசில் விட்டு, நன்றாக வேக விடவும். மட்டன் நன்றாக மிருதுவாக வெந்து வரும்.
- 5
பிறகு 10 முந்திரிப்பருப்பை பேஸ்ட்டாக அரைத்து அதில் சேர்த்து வதக்கி வைக்கவும்.
- 6
பிறகு வாணலியில் 5 கப் தண்ணீரை கொதிக்க வைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, நல்லெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, ஊற வைத்த அரிசியை சேர்த்து, அரை எலுமிச்சம்பழத்தை பிழிந்து விடவும்.
- 7
சாதம் முக்கால் பங்கு வரை வெந்தால் மட்டும் போதும். ஒரு அரிசியை கையிலெடுத்து அழுத்தினால் இரண்டாக உடைய வேண்டும்.. மசியும் வரை வேகக் கூடாது.
பிறகு ஒரு வடிதட்டில் நீரை வடித்து வைக்கவும். - 8
அரை மூடி தேங்காயை வைத்து கெட்டியான தேங்காய்ப்பால் ஒன்றரை கப் அளவிற்கு எடுத்து வைக்கவும்.
- 9
பிறகு ஒரு தோசைக்கல்லை சூடாக்கி, அதன்மேல் பிரியாணி செய்வதற்கான பாத்திரத்தை வைத்து நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து, வேகவைத்த பிரியாணி அரிசியை பரவலாக ஒரு அடுக்கிற்கு வைக்கவும்.. உடனே அதன் மேல் ஒரு கரண்டி தேங்காய் பால் சுற்றிலும் ஊற்றவும்.
- 10
பிறகு அதன் மேல் வேக வைத்த மட்டன் கலவையை பரவலாக வைக்கவும். அதன்மேல் வேக வைத்த சாதத்தை வைத்து தேங்காய் பால் சேர்த்து, மேலும் இரண்டு மூன்று அடுக்குகளாக மாற்றி மாற்றி அனைத்தையும் சேர்த்து வைக்கவும். தேங்காய் பாலை முழுவதும் இடையிடையே சேர்க்கவும்.
- 11
பிரியாணி பாத்திரத்தை நன்றாக மூடி வைத்து அதன்மேல் தம் செய்வதற்காக கனமான பொருளை வைக்கவும். 10 நிமிடங்கள் அதிகமான தீயிலும், 10 நிமிடங்கள் மிதமான தீயிலும் வைத்து இறக்கவும்.
- 12
நன்றாக கிளறி விட மட்டன் மற்றும் மசாலா மற்றும் சாதத்துடன் நன்றாகக் கலந்து நல்ல மணமுடன் மட்டன் வெள்ளை பிரியாணி சுவையாக தயார்.. மட்டன் குழம்புடன் சூடாக பரிமாறவும்...😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)
#combo3 அரிசி உடையாமல், உதிரி உதிரியான, ருசியான பாஸ்மதி மட்டன் பிரியாணி செய்முறை. இதற்கு மட்டன் எலும்பு தாளிச்சா சேர்த்து சாப்பிட்டால் ருசி அபாரமாக இருக்கும் Laxmi Kailash -
பொன்னி ரைஸ் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#Biryani#week16பிரியாணி என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் .ஆனால் நாம் பாஸ்மதி ரைஸ் சீரகசம்பா போன்ற அரிசியில் செய்யும் போது ஒரு சில நேரம் அரிசி குழைந்துவிட கூடும்ஆனால் பொன்னி அரிசியில் பிரியாணி செய்யும்போது பொலபொலவென்று ருசியாக இருக்கும். சீரக சம்பா அரிசி சுவையில் பொன்னி அரிசி மட்டன் பிரியாணி Sangaraeswari Sangaran -
-
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
-
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி
#kavithaபிரியாணி, பரோட்டா, தயிர்சாதம், சாம்பார்சாதம், நெய் சோறு, வகை சாப்பாடு ஆகிய எல்லாவற்றிற்கும் பொருத்தமான மட்டன் சுக்கா ரெசிபி செட்டிநாடு முறையில் இங்கு பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி
#vattaramweek 3திண்டுக்கல் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற ருசியான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி Sowmya -
மட்டன் பிரியாணி
#cookwithfriends #thulasi #ilovecooking மட்டன் பிரியாணி தயார் செய்ய இளம் ஆட்டுக் கறியைத் தேர்வு செய்யவும்veni sridhar
-
திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி
#np1திண்டுக்கல் மட்டன் பிரியாணி தென்னிந்தியாவின் பிரபலமான பிரியாணிகளில் ஒன்று. இதில் கையால் தயாரிக்கப்பட்ட பிரியாணி மசாலாவைச் சேர்ப்போம், இது பிரியாணிக்கு நல்ல சுவையைத் தருகிறது. உண்மையான சுவை பெற சீராகா சம்பா அரிசியைப் பயன்படுத்தி இந்த பிரியாணியை உருவாக்கவும். வீட்டில் உணவக பாணியில் தலப்பாக்கட்டி பிரியாணியைத் தயாரிக்க,கீழே உள்ள பதிவை பார்க்கவும். Swathi Emaya -
தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G -
மட்டன் பிரியாணி(Mutton biryani recipe in tamil)
#grand1 கிறிஸ்துமஸ் விழாவில் முக்கியமான பங்கு மட்டன் பிரியாணிக்கு எப்பொழுதும் உண்டு அதனால் என் முறை மட்டன் பிரியாணி Viji Prem -
குக்கர் சிக்கன் பிரியாணி
#magazine4அனைவருக்கும் அவரவர் முறையில் பிரியாணி செய்ய தெரிந்ததே ஆகும். என்னதான் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டாலும் ஹோட்டல் சுவையில் சாப்பிட ஆசையாக இருக்கும். நான் குறிப்பிட்டிருக்கும் முறையில் செய்து பாருங்கள் அற்புதமாக ஹோட்டல் சுவையில் சூப்பராக பிரியாணி செய்ய முடியும். Asma Parveen -
-
ஹைதராபாத் மட்டன் பிரியாணி (Hyderabad mutton biryani recipe in tamil)
#andhraஆந்திர மாநிலம் , ஹைதராபாத் பட்டணத்தின் மட்டன் பிரியாணி உலகப்புகழ் பெற்றது...... அதனை நமது சமையலறையில் எவ்வாறு எளிமையான முறையில் தயார் செய்வது என்பதை இந்த பதிப்பில் காண்போம்..... karunamiracle meracil -
-
தானிய பிரியாணி
#Np1 இந்த பிரியாணி சைவம் அசைவம் கலந்தது இது சீரக சம்பா அரிசியில் செய்தால் மணமும் ருசியும் சுவையும் சத்தும் நிறைந்தது Jayakumar -
மதுரை மட்டன் குழம்பு (Spicy Mutton Gravy) (Madurai mutton kulambu recipe in tamil)
சுண்டி இழுக்கும் மணமும் நிறமும் சுவையும் கொண்ட மட்டன் குழம்பு.. Kanaga Hema😊 -
-
-
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
ஆம்பூர் மட்டன் பிரியாணி (Aambur mutton biryani recipe in tamil)
#onepot ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி மட்டனை தனியாக வேக வைத்து அரிசியை தனியாக வேக வைத்து பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து தம் செய்வார்கள் நான் ஆம்பூர் பிரியாணி குக்கரில் ஒரே முறையில் முயற்சித்துப் பார்த்தேன் சுவையில் எந்த மாற்றமும் இல்லை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
-
-
-
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
-
கோவை மட்டன் பிரியாணி (Kovai mutton biryani recipe in tamil)
இந்த மட்டன் பிரியாணி புதிய சுவையில் இருக்கும். மசாலா பொருட்களையும் அரைத்து சேர்ப்பது மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi
More Recipes
கமெண்ட்