சாக்லேட் வாழைப்பழ பிரட்(Chocolate banana bread recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

சாக்லேட் வாழைப்பழ பிரட்(Chocolate banana bread recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 2 கப் கோதுமை மாவு
  2. 1/4 கப் கொக்கோ பவுடர்
  3. 2 வாழைப்பழம்
  4. 1 கப் பிரவுன் சக்கரை
  5. 2 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  6. 1 ஸ்பூன் பேக்கிங் சோடா
  7. 1 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  8. 1/4 கப் சாக்லேட் சிப்ஸ்
  9. 2 முட்டை
  10. முந்திரி பருப்பு
  11. 1/4 கப் காய்ச்சி ஆறிய பால்
  12. 1/2 கப் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    முதலில் முட்டை சேர்த்து பீட் செய்யவும், பின்பு வாழைப்பழம் சிறு சிறு துண்டுகளாக வெட்டி சேர்க்கவும். வெண்ணிலா எசன்ஸ், எண்ணெய், பிரவுன் சக்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு கோதுமை மாவு, கொக்கோ பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், சேர்த்து சலிக்கவும். அடுத்தது சாக்லேட் சிப்ஸ், பால், சேர்த்து கலக்கவும்.

  3. 3

    கேக் டின்னில் வெண்ணெய் தடவி பட்டர் பேப்பர் வைத்து கலவையை ஊற்றவும். இதில் விருப்பமெனில் முந்திரி பருப்பு, சாக்லேட் சிப்ஸ் மேலே சேர்க்கவும். Oven'னை 180 ° C அளவிற்கு 10 நிமிடங்கள் சூடேற்றவும். Oven கேக் டின்னில் உள்ளே வைத்து ஒரு மணி நேரத்திற்கு 180 °C அளவில் பேக் செய்யவும்.
    கேக் வெந்த பின் அதை வெளியில் எடுத்து ஆற வைக்கவும்.

  4. 4

    சுவையான சாக்லேட் வாழைப்பழ பிரட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes