அவரைக்காய் சமோசா(Avaraikkai samosa recipe in tamil)

Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014

என் மகனுக்காக.....

அவரைக்காய் சமோசா(Avaraikkai samosa recipe in tamil)

என் மகனுக்காக.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
2 பரிமாறுவது
  1. 1 கப் மைதா மாவு
  2. 10 அவரைக்காய்
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1 ஸ்பூன் எண்ணைய்
  5. 1/2 ஸ்பூன் கரம்மசாலா
  6. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  7. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. உப்பு

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    மைதா மாவில் தண்ணீர் மற்றும் எண்ணெயைச் சேர்த்து மென்மையான மாவாகச் பிசையவும்.

  2. 2

    அவரைக்காய் மற்றும் வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.

  3. 3

    கடாயை அடுப்பில் வைத்து, எண்ணைய் சேர்க்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    அதில் நறுக்கிய அவரைக்காயை சேர்க்கவும். பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். நன்கு கலக்கவும்.

  5. 5

    மைதா மாவை சப்பாத்தி வடிவில் தேய்த்து, அதை நான்கு துண்டுகளாக வெட்டுங்கள்.

  6. 6

    ஒவ்வொரு துண்டிலும் சமைத்த அவரைக்காய் கலவையை சேர்க்கவும். பின் அதை மூடி ஓரங்களை விரல்களால் அழுத்தவும்.

  7. 7

    எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான எளிய சமோசா தயார். அவரைக்காய் சாப்பிடாத குழந்தைகளுக்கு இது போல செய்து கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014
அன்று

Similar Recipes