உடனடி சமோசா (Samosa recipe in tamil)

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#deepfry சமோசா பிடிக்கத்தவங்க யாருமே இல்லை. இப்பவே வேணும்னு அடம் பிடிக்கறவங்களுக்கு இப்படி வித்தியாசமா செய்து கொடுங்கள்

உடனடி சமோசா (Samosa recipe in tamil)

#deepfry சமோசா பிடிக்கத்தவங்க யாருமே இல்லை. இப்பவே வேணும்னு அடம் பிடிக்கறவங்களுக்கு இப்படி வித்தியாசமா செய்து கொடுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பேர்
  1. 6அப்பளம்
  2. 2முட்டை
  3. 2பெரிய வெங்காயம்
  4. 1 ஸ்பூன்கடுகு
  5. கொத்தமல்லி இலை
  6. கறிவேப்பிலை
  7. மிளகாய் தூள்
  8. 2 ஸ்பூன்மைதா மாவு
  9. உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு,கடுகு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின்னர் முட்டையை உடைத்து ஊற்றி வதக்கவும்

  2. 2

    பின்னர் அப்பளத்தை ஒரு அகலமான தட்டில் தண்ணீர் ஊற்றி அதில் ஒவ்வொரு அப்பளமாக எடுத்து முன் பக்கமும் பின் பக்கமும் திருப்பி நனைத்து வைத்து கொள்ளவும்.பிறகு அப்பளத்தை (இரண்டாவது படத்தில் காட்டியவாறு) மடிக்கும் அளவுக்கு வருமாறு நனைக்கவும்

  3. 3

    பிறகு அப்பளத்தின் மேல் பகுதியில் ஒட்டுவதற்கு மைதா கலவை ரெடி செய்து வைத்து கொள்ளவும். (மைதாவும் தண்ணீரும் சேர்த்து கலக்கவும்)

  4. 4

    அதற்க்கு பிறகு நனைத்த அப்பளத்தை எடுத்து அதன் நடுவே பொரித்த முட்டையை வைத்து ஓரங்களில்,கலந்த மைதா கலவையை சுற்றிலும் தடவவும்

  5. 5

    தடவிய பிறகு பாதியாக மடித்து மேலே சிறிதளவும், கீழே சிறிதளவு மடித்து ஓரங்களை நன்றாக அழுத்தி விடவும் (அழுத்தாவிடில் பொரிக்கும் பொழுது பிரிந்து வந்துவிடும்)

  6. 6

    பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ரெடி செய்து வைத்துள்ள அப்பளத்தை ஒன்று ஒன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

  7. 7

    சுட சுட அப்பள சமோசா ரெடி ஒரு தட்டிற்க்கு மாற்றி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
தயா ரெசிப்பீஸ்
அன்று
Coimbatore

Similar Recipes