உருளைக்கிழங்கு சிப்ஸ்(POTATO CHIPS RECIPE IN TAMIL)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

உருளைக்கிழங்கு சிப்ஸ்(POTATO CHIPS RECIPE IN TAMIL)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. 3உருளைக்கிழங்கு (தேவையான எண்ணிக்கையில்)
  2. காரத்திற்குமிளகாய்த்தூள்
  3. சிறிதளவுகறிவேப்பிலை
  4. சுவைக்கேற்பஉப்பு
  5. பொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    உருளைகிளங்கின் தோல் நீக்கி கழுவிக் கொள்ள வேண்டும்.

  2. 2

    சிப்ஸ் வடிவத்தில் நறுக்கும் அச்சு அல்லது தோல் நீக்கியின் உதவியில் வட்ட வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.

  3. 3

    பின்,நன்றாக 2முறை கழுவி,தண்ணீரை வடித்துக்கொள்ள வேண்டும்.
    ஒரு டம்ளரில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    வாணலியில், பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி,ஒவொரு துண்டுகளாக உதிரியாக சேர்க்க வேண்டும்.

  5. 5

    பொரிந்து கொண்டிருக்கும் வேளையில்,கரைத்து வைத்த உப்பு தண்ணீர் 1/2ஸ்பூன் சேர்க்க வேண்டும்.

    அடுப்பை விட்டு தள்ளி நிற்கவும்.30 நொடிகளில் சத்தம் அடங்கி விடும்.

    இவ்வாறு உப்பு தண்ணீர் சேர்த்தால் எல்லா துண்டுகளுக்கும் உப்பு சமமாக பரவும்.

  6. 6

    அடிக்கடி கிளறி,நன்றாக பொரிந்து பிரவுன் கலர் வரும் போது எடுக்கவும்.

  7. 7

    இவ்வாறு எல்லா துண்டுகளையும் பொரிக்கவும்.

    கடைசியாக அடுப்பைஅணைத்து சிறிதளவு கறிவேப்பிலை பொரித்து சேர்க்கவும்.சாப்பிடும்போது வாசனை நன்றாக இருக்கும்.

    பின் உப்பு மற்றும் மிளகாய் தூள் தேவையான அளவு சேர்த்து குலுக்கி,கிளறி விட வேண்டும்.

  8. 8

    அவ்வளவுதான்.
    சுவையான, அனைவருக்கும் பிடித்தமான, உருளைக்கிழங்கு சிப்ஸ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes