மாப்பிள்ளை சம்பா அரிசி பாயாசம் (black rice payasam recipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#npd3
மறந்தும் ...மறைந்தும், போன மாப்பிள்ளை சம்பா அரிசி யை பயன்படுத்தி ஆரோக்கியமான பாயாசம்.

மாப்பிள்ளை சம்பா அரிசி பாயாசம் (black rice payasam recipe in tamil)

#npd3
மறந்தும் ...மறைந்தும், போன மாப்பிள்ளை சம்பா அரிசி யை பயன்படுத்தி ஆரோக்கியமான பாயாசம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பேர்
  1. 1 டம்ளர் மாப்பிள்ளை சம்பா அரிசி
  2. 1 டம்ளர் வெல்லம்
  3. 3 ஏலக்காய்
  4. 15 முந்திரி
  5. 15 உலர்ந்த திராட்சை
  6. 1 கப் காய்ச்சிய பால்
  7. 5 ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மாப்பிள்ளை சம்பா அரிசியை சுத்தம் செய்து ஒரு கடாயில் வறுக்கவும்.

  2. 2

    மிதமான தீயில் வறுக்கும் பொழுது,அரிசி பொரிந்து வரும் பொழுது இறக்கி ஆறவிடவும்

  3. 3

    வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.

  4. 4

    ஆரிய அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து,இரவையும் மாவும் இருக்கும் பதத்திற்கு அரைக்கவும்.

  5. 5

    வெல்லம் கரைந்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும்.பதம் தேவையில்லை....

  6. 6

    அரைத்த அரிசியை குக்கரில் சேர்த்து இரண்டு மடங்கு தண்ணீர் வைத்து 3 விசில் வேகவிடவும்.

  7. 7

    வேக வைத்த அரிசியினை ஆறவிட்டு நன்கு கிளறி விடவும்.

  8. 8

    இதனுடன் வடிகட்டிய பாகை சேர்க்கவும்.

  9. 9

    அரிசி வெல்லம் சேர்த்த பிறகு நன்கு ஆறி.... இளம் சூடாக இருக்கும் பொழுது பாலை சேர்க்கவும்..... இதனை நன்கு கலக்கவும்

  10. 10

    ஒரு கடாயில் நெய்யுடன் திராட்சை முந்திரி சேர்க்கவும்

  11. 11

    திராட்சை முந்திரியை பொன்னிறமாக வறுத்து பாயாசத்தில் கலந்து.....

  12. 12

    இளம் சூட்டுடனோ அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்தோ பரிமாறலாம்..... சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசி பாயாசம் ரெடி........

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes