*வெஜிடெபிள்ஸ் சாம்பார்*(நோ தால்)(VEGETABLE SAMBAR RECIPE IN TAMIL)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

காய்கறி ரெசிப்பீஸ்
சாம்பார் என்றால் அதில் பருப்பு போட்டுத்தான் வைப்போம்.ஆனால் இந்த சாம்பாரில் பருப்பிற்கு பதில் காய்கறிகள் போட்டு செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது.சுடு சாதத்தில் நெய்விட்டு இந்த சாம்பாரை விட்டு சாப்பிட்டதில் மிகவும் நன்றாக இருந்தது.இட்லி, தோசை, ஆப்பம் என்றால் அட்டகாசம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
8பேர்
  1. 3பெரிய வெங்காயம்
  2. 1பெரிய தக்காளி
  3. 2சிறியகேரட்
  4. 1சின்ன உருளைகிழங்கு
  5. 2 டேபிள்ஸ்பூன்கோஸ் (நறுக்கினது)
  6. 1சிறியமுள்ளங்கி
  7. 1சிறியகுடமிளகாய்
  8. 4ப.மிளகாய்
  9. 11/2டேபிள் ஸ்பூன்சாம்பார் பொடி
  10. ருசிக்குக.உப்பு
  11. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  12. 1 டீஸ்பூன்கடுகு
  13. 1/2டீஸ்பூன்வெந்தயம்
  14. 3சி.மிளகாய்
  15. 1 டீஸ்பூன்பெருங்காயம்
  16. 1 டேபிள்ஸ்பூன்எண்ணெய்
  17. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    வெங்காயத்தை சிறியதாகவும், சற்று பெரியதாகவும் நறுக்கிக் கொள்ளவும்.உருளை கிழங்கை தோல் சீவி சற்று பெரியதாகவும், மற்ற காய்கறிகளையும், அதே போல் நறுக்கவும்.ப.மிளகாயை கீறிக்கொள்ளவும்.

  2. 2

    குக்கரில் தேவையான தண்ணீர், உப்பு போட்டு நறுக்கின காய்கறிகளை போட்டு, குக்கரை மூடி போட்டு மூடி 2 விசில் விட்டு வேக விடவும்.

  3. 3

    வெந்ததும் அதனை வடிகட்டி ஆறவிடவும்.வடித்த தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.

  4. 4

    வெந்து ஆறின காய்கறிகளை மிக்ஸியில் போடவும்.பிறகு மைய அரைக்கவும்.

  5. 5

    கடாயில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு,வெந்தயம், மிளகாய் தாளிக்கவும்.பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

  6. 6

    வதங்கியதும்,அடுப்பை சின்னதாக்கி, அரைத்த விழுது, சாம்பார் பொடி போடவும்.பொடி வாசனை போக வதங்கினதும், வேகவைத்து வடித்த தண்ணீரை விட்டு நன்கு கொதிக்க விடவும்.கொதித்து சற்று கெட்டியானதும், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு அடுப்பை நிறுத்தி விடவும்.

  7. 7

    இப்போது மிகவும் சுவையான, ஆரோக்கியமான, வித்தியாசமான,* வெஜிடெபிள்ஸ் சாம்பார்* தயார். செய்து பார்த்து அசத்தி சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes