பாம்பே கராச்சி அல்வா(bombay karachi halwa recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

பாம்பே கராச்சி அல்வா(bombay karachi halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
10-12 பரிமாறுவது
  1. 1 கப் சோள மாவு
  2. 2 கப் தண்ணீர்
  3. 2 கப் சர்க்கரை
  4. 2 கப் தண்ணீர்
  5. 1/2 எலுமிச்சை சாறு
  6. 3/4 கப் நெய்
  7. 1/4 கப் உடைத்த முந்திரி
  8. சிறிதுகலர் தூள்
  9. சிறிதுஏலக்காய்த்தூள்
  10. சிறிதுபொடியாக நறுக்கிய பாதாம் பிஸ்தா

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் சோள மாவு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து வடிகட்டி தனியாக வைக்கவும்

  2. 2

    மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து சர்க்கரை நன்றாக கரைந்ததும் இதில் எலுமிச்சை சாறு சேர்த்து குறைந்த தீயில் வைக்கவும்

  3. 3

    இப்போது கரைத்து வைத்திருக்கும் சோள மாவு கரைசலை ஊற்றி நன்றாக கிளறவும் 5 நிமிடம் கழித்து இவை கெட்டியாகும் வரும் பொழுது சிறிது சிறிதாக நெய் ஊற்றி கலக்கவும்

  4. 4

    அனைத்தினையும் உள்ளிழுத்த பிறகு கடைசி ஊற்றும் பொழுது சிறிது கலர் தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கிளறவும் கலக்கும் பொழுது இவை குறைந்த தீயில் இருக்க வேண்டும்

  5. 5

    இறுதியாக இதில் உடைத்த முந்திரி ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும் 30 நிமிடம் கழித்து இருக்கும் அனைத்தும் வெளியேறி வரும் அல்வா பார்ப்பதற்கு கண்ணாடி போல் தெரியும் இதுதான் சரியான பதம்

  6. 6

    உடனடியாக நெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றவும் இதன் மேல் பொடியாக நறுக்கிய பாதாம் முந்திரியை தூவி நன்றாக ஆறவிடவும் 2 மணி நேரம் கழித்து இதனை துண்டுகளாக போடவும்

  7. 7

    சுவையான அட்டகாசமான பாம்பே கராச்சி அல்வா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes